ரயில் விபத்தில் இறந்தது 275 பேர் தான்... தவறாக எண்ணி விட்டோம்- ஒடிசா தலைமைச் செயலாளர் பரபரப்பு தகவல்

By Ajmal KhanFirst Published Jun 4, 2023, 2:35 PM IST
Highlights

கோரமண்டல் ரயில் விபத்தில் 288 பேர் உயிர் இழந்ததாக ஒடிசா அரசு சார்பாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், ஒரு உடலை இரண்டு முறை எண்ணியதால் தவறான பலி எண்ணிக்கை வெளியிடப்பட்டதாகவும், தற்போது 275 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
 

ரயில் விபத்து- இறந்தது எத்தனை பேர்.?

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் ரயில் ஒடிசாவின், பாலசோர் அருகே  சென்று கொண்டிருந்த போது சரக்கு ரயிலில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விபத்தில் சிக்கி 294 பேர் பலியானதாக தகவல் வெளியானது மேலும் 1000க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து ஒடிசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் சென்னைக்கு ரயில் வந்து கொண்டிருந்ததால் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் உயிரிழந்திருக்க கூடும் என அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பாக உதயநிதி, சிவசங்கர் ஆகிய அமைச்சர்கள் ஒடிசா சென்றிருந்தனர். இந்தநிலையில் தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ஒடிசா தலைமை செயலாளர் தகவல்

இதில்,  119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளதாக தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் 8 பேரில் நிலை என்ன ஆனது என தெரியாத நிலை தற்போது உருவாகியுள்ளது. இதனிடையே ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை ஒடிசா அரசு தெரிவித்திருந்தது. அதன் படி 288 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த தகவலை மறுத்த ஒடிசா தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா, ரெயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 275 பேர் மட்டுமே உயிர் இழந்துள்ளனர்.

288 பேர் என்பது தவறான தகவல் என கூறினார். சில உடல்கள் இருமுறை எண்ணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். மாவட்ட மாஜிஸ்திரேட் தரவுகளை சரிபார்த்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 275 ஆக குறைந்துள்ளதாகவும், இதுவரை  88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,  காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போன தமிழர்கள் 8 பேர் யார்..? விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு
 

click me!