35 பைசாவுக்கு ஐஆர்சிடிசி (IRCTC) வழங்கும் ரயில் பயண இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் ரூ.10 ஆயிரம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நடந்த இந்த சம்பவத்தில் 288 பேர் உயிரிழந்துவிட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி முடிவடைந்து வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசு சார்பில் இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஆனால் ஐஆர்சிடிசியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகள் எடுக்கும் பயணக் காப்பீடு எடுத்திருந்தால் அதன் மூலமும் பலன் இழப்பீடு பெறலாம்.
10 ஆண்டுகளில் ரயில்வே விபத்துகளால் 2.6 லட்சம் பேர் பலி; ரயில் மோதல் முக்கியக் காரணம் அல்ல!
ரூ.10 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை
ரயில்வே பயணக் காப்பீட்டு எடுக்க பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வெறும் 35 பைசா செலுத்தினால் போதும். இந்த வசதியின் மூலம், ஐஆர்சிடிசி (IRCTC) ரயிலில் பயணிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்த காப்பீட்டின் கீழ், பயணிகள் தங்கள் ரயில் பயணத்தின்போது மதிப்புமிக்க பொருட்களை இழந்தால், அதற்கு இழப்பீடு பெறமுடியும். மேலும், விபத்து ஏற்பட்டால், சிகிச்சைக்கான செலவுகளை ரயில்வே ஏற்கும். இறப்பு ஏற்பட்டால், காப்பீட்டாளரின் நாமினிக்கு இழப்பீடு வழங்கப்படும்.
ஒரு பயணி ரயில் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தரமாக ஊனமுற்றாலோ, 10 லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை வழங்கப்படும். பகுதி அளவு ஊனம் ஏற்பட்டால், அவருக்கு இழப்பீடாக 7.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பலத்த காயம் ஏற்பட்டால், 2 லட்சம் ரூபாயும், சிறிய காயம் ஏற்பட்டால், 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
எலக்ட்ரானிக் இன்டர்லாக் தான் ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்: ரயில்வே அமைச்சர் விளக்கம்
ரயில் பயணக் காப்பீட்டை எவ்வாறு பெறுவது?
ரயில்வே இணையதளம் மற்றும் ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிகேஷன் மூலம் இந்தக் காப்பீட்டைப் எடுப்பது எளிது. ஆனால், இந்த இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயம் அல்ல. பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, டிராவல் இன்சூரன்ஸ் வேண்டுமா என்று கேட்கப்படும் இடத்தில் ஆம் என்று தெரிவித்தால் போதும். இதன் மூலம் ரயில் டிக்கெட் கட்டணத்துடன் 35 பைசா மட்டும் பயண காப்பீட்டுத் தொகையாக வசூலிக்கப்படும்.
இந்திய ரயில்வே பயணிகள் ரயில் விபத்தில் சிக்கிய 4 மாதங்களுக்குள் காப்பீடு கோரலாம். பயணிகள் காப்பீட்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்று காப்பீட்டுக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கும்போது பயணிகள் நாமினியின் பெயரை நிரப்ப வேண்டும். அவ்வாறான நிலையில், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதைக் கோருவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
கர்நாடகா பஸ்ஸில் சில்மிஷம் செய்த இளைஞரை சரிமாரியாக தாக்கி விரட்டி அடித்த இளம்பெண்!