10 ஆண்டுகளில் ரயில்வே விபத்துகளால் 2.6 லட்சம் பேர் பலி; ரயில் மோதல் முக்கியக் காரணம் அல்ல!

By SG Balan  |  First Published Jun 4, 2023, 1:26 PM IST

ரயில்வே விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்கள் அல்லது ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.


ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். சுமார் 900 பேர் காயமடைந்துள்ளனர். இது இந்தியாவின் மிகப்பெரிய ரயில் விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இச்சம்பவம் இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளது.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) பதிவேடுகளைப் பார்த்தால், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 2.6 லட்சம் பேர் ரயில் விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவருகிறது. அதில், பெரும்பாலான ரயில் விபத்து மரணங்கள் வெள்ளிக்கிழமை நடந்தது போல ரயில்கள் விபத்துக்குள்ளானதால் நிகழ்ந்தவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டவர்களும் வெவ்வேறு காரணங்களால் ரயிலில் அடிப்பட்டு இறந்தவர்களும்தான் அதிகம் என்று குற்ற ஆவணக் காப்பகத்தின் பதிவுகள் காட்டுகின்றன.

Tap to resize

Latest Videos

கர்நாடகா பஸ்ஸில் சில்மிஷம் செய்த இளைஞரை சரிமாரியாக தாக்கி விரட்டி அடித்த இளம்பெண்!

ரயில் விபத்து மரணங்கள்:

என்சிஆர்பி ரயில்வே விபத்து மரணங்களை ஐந்து வகைகளாக வகைப்படுத்துகிறது - தடம் புரண்டது, மோதல்கள், வெடிப்புகள் / தீ விபத்துகள், ரயில்களில் இருந்து விழுவது அல்லது ரயில் பாதைகளில் மக்கள் மீது மோதுவது, மற்றும் 'பிற காரணங்கள்' என்ற 5 வகைகளில் ரயில்வே மரணங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

என்சிஆர்பியின் 'இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள்' அறிக்கையின்படி , 2011 ஆம் ஆண்டில், இந்தியாவில் ரயில் விபத்துக்களால் சுமார் 25,872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2012 இல் 27,000 ஆகவும், 2013 இல் 27,765 ஆகவும், 2014 இல் சுமார் 25,000 நபர்களாகவும் குறைந்துள்ளது.

இது 2017ல் இருந்து படிப்படியாக மேலும் குறைந்தது. 2019 வரை இந்த எண்ணிக்கையை சுமார் 24,000 என்ற அளவிலேயே இருந்தது. 2020 இல் கோவிட்-19 தொற்று பரவலால் பயணங்கள் வெகுவாக குறைந்துவிட்டதால், ரயில் விபத்து மரணங்களும் மிகவும் குறைந்தன. அந்த ஆண்டில் ரயில்வே விபத்து இறப்புகள் எண்ணிக்கை 11,968 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை 2021 இல் 27 சதவீதம் அதிகரித்து 16,431 ஆக இருந்தது. இருப்பினும் இது கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையைவிட கணிசமாகக் குறைவாக இருந்தது.

2024ஆம் ஆண்டுக்குள் கவச் தொழில்நுட்பம் முழுமையாக செயல்படுத்தப்படும்: ரயில்வே உறுதி

உயிரிழப்புக்கான காரணங்கள்:

பெரும்பாலான இறப்புகள் ரயில்களில் இருந்து விழுந்து அல்லது ரயிலில் அடிப்பட்டு ஏற்பட்டதாக என்சிஆர்பியின் தரவு மூலம் தெரியவருகிறது. அதன்படி, 2021ல் நடந்த மொத்த ரயில் விபத்து இறப்புகளில், 11,036 பேர் இந்த வகையில் இறந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 'பிற காரணங்கள்' பிரிவில் 5,287 மரணங்கள் பதிவாகியுள்ளன. 'பிற காரணங்கள்' பிரிவில் எத்தகைய மரணங்கள் வரும் என்று விளக்கப்படவில்லை.

இதற்கு நேர்மாறாக, ரயில் மோதி 86 பேரும், தடம் புரண்டதில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர். 2021ல் யாரும் தீ அல்லது வெடி விபத்தில் இறக்கவில்லை.  கடந்த ஐந்தாண்டுகளின் புள்ளிவிவரங்களிலும் இந்த போக்கைப் பார்க்கலாம். 2017-21 க்கு இடையில் பதிவான ஒரு லட்சம் ரயில் விபத்து இறப்புகளில், 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயிலில் இருந்து விழுந்து அல்லது ரயிலில் அடிபட்டு இறந்தனர்.

ரயில் தடம் புரண்டதில் 293 பேரும், ரயில் மோதல்களில் 446 பேரும் மட்டுமே இறந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ரயில்வே விபத்து இறப்புகளைப் பதிவு செய்வதில் மகாராஷ்டிரா முன்னணியில் உள்ளது. இது 2017 மற்றும் 2021 க்கு இடையில் 17,000 இறப்புகளைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் (13,074) மற்றும் மேற்கு வங்கம் (11,967) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இவற்றுடன் ஒப்பிடும்போது ஒடிசாவின் எண்ணிக்கை மிகக் குறைவானது. வெறும் 1,845 இறப்புகளே பதிவாகியுள்ளன.

எலக்ட்ரானிக் இன்டர்லாக் தான் ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்: ரயில்வே அமைச்சர் விளக்கம்

click me!