நுபுர் ஷர்மா முதல்வர் வேட்பளார் ஆகவும் வாய்ப்பு உண்டு.. ஒரே போடு போட்ட அசாதுதீன் ஒவைசி..!

By Kevin KaarkiFirst Published Jun 19, 2022, 10:39 AM IST
Highlights

அரசியலமைப்பு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வரும் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குள் நுபுர் ஷர்மா தலைவராக உருவெடுத்திடுவார்.

முகமது நபிகள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் பா.ஜ.க.-வில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் ஷர்மா உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி வலியுறுத்தி உள்ளார். இந்திய தண்டனை சட்ட விதிகளின் படி நுபுர் ஷர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

வரும் காலங்களில் நுபுர் ஷர்மா மிகப் பெரும் தலைவராக காட்சிப்படுத்தப்பட்டு, விரைவில் டெல்லு முதல்வர் வேட்பாளராகவும் வாய்ப்புகள் உண்டு என அசாதுதீன் ஒவைசி குற்றம்சாட்டி உள்ளார். 

“நுபுர் ஷர்மா கைது செய்யப்பட்டு அவர் மீது இந்திய சட்ட விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வரும் ஆறு அல்லது ஏழு மாதங்களுக்குள் நுபுர் ஷர்மா தலைவராக உருவெடுத்திடுவார். மேலும் நுபுர் ஷர்மா டெல்லி முதல்வர் வேட்பாளராகும் வாய்ப்புகளும் அதிகம் தான்,” என அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

அசாதுதீன் ஒவைசி கோரிக்கை:

பா.ஜ.க. நுபுர் ஷர்மாவை பாதுகாக்க முயற்சி செய்கிறது. தெலுங்கானா முதல்வர் நுபுர் ஷர்மாவை கைது செய்து, தெலுங்கானா அழைத்து வர வேண்டும் என அசாதுதீன் ஒவைசி கோரிக்கை விடுத்து உள்ளார். 

“பா.ஜ.க. நுபுர் ஷர்மாவை பாதுகாத்து வருகிறது. பிரதமரிடம் வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர் தொடர்ந்து மவுனம் காக்கிறார். ஏ.ஐ.எம்.ஐ.எம். சார்பில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளது. மாநில முதல்வர் போலீசாரை டெல்லிக்கு அனுப்பி, நுபுர் ஷர்மா மற்றும் அவரின் சகோதரி மொகோத்ராமா ஆகியோரை அழைத்து வர வேண்டும்,” என ஒவைசி தெரிவித்து இருக்கிறார்.

பிரயாக்ராஜ் விவகாரம்:

மேலும், உத்திர பிரதேச மாநில அரசின் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை குறித்து அசாதுதீன் ஒவைசி பேசினார். அப்போது, “அலகாபாத்தில், அஃப்ரீன் பாத்திமாவின் வீடு பிரயாக்ராஜ் இடித்து இருக்கிறது. ஏன் இடித்தீர்கள்? அவரின் தந்தை போராட்டத்தை நடத்தியதற்கா? நீதியன் அடிப்படையில் தான் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. யார் முடிவு எடுப்பார்கள்? அவர் போராட்டத்தை கூட்டினாரா, இல்லையா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும். நீதிமன்றம் அதன்படி நடவடிக்கை எடுக்கும், ஆனால் நீதிமன்றம் அவரின் மனைவி மற்றும் குழந்தைகளை தண்டிக்காது,” என தெரிவித்தார்.

click me!