முகமது நபிகள் விவகாரம்... பா.ஜ.க. நிலைப்பாடு அந்த நாடுகளுக்கு நிச்சயம் தெரியும்... மத்திய அமைச்சர் அதிரடி..!

By Kevin KaarkiFirst Published Jun 19, 2022, 9:47 AM IST
Highlights

கடந்த சில நாட்களில் பலர் இந்தியாவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள துவங்கி உள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். 

பா.ஜ.க. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இரு நிர்வாக உறுப்பினர்கள் முகமது நபிகள் குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகள் பாதிக்கப்பட்டன. இவற்றை நாடுகள் வெளிப்படுத்தின. ஆனால், இது அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை என்பதை நாடுகள் பாராட்டின என்று தெரிவித்து இருக்கிறார்.

முகமது நபிகள் விவகாரத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு முற்றிலும் முரணானது. மேலும் இந்த விவகாரத்தை அடுத்து கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு விட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

“சர்ச்சைக் கருத்துக்கு வளைகுடா நாடுகள் மட்டும் இன்றி தென்கிழக்கு ஆசியா நாடுகளும் கவலை தெரிவித்த நிலையில், இது அரசின் நிலைப்பாடு இல்லை என்பதை பாராட்டுகின்றனர். அவர்கள் நம்முடன் நல்லுறவு கொண்டுள்ளனர், அவர்களுக்கு நாம் யார் என்று நன்றாகவே தெரியும், மேலும் அது நம் நிலைப்பாடு இல்லை என்றும் நிச்சயம் புரியும்,” என ஜெய்சங்கர் தெரிவித்தார். 

கட்சி சார்பில் அதன் நிலைப்பாடு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. மக்கள் இதை புரிந்து கொள்வர் என எதிர்பார்க்கிறோம். “கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர். வெளிநாடுகளுன் நல்லுறவை காப்பது மிகவும் சலவாலான காரியம் ஆகும். நம் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும், அதை தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம். கடந்த சில நாட்களில் பலர் இந்தியாவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள துவங்கி உள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். 

இடை நீக்கம்:

“பாடம் எடுப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லாதது. ஆனால் இதனை நான் அவ்வாறாகவே எடுத்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் மக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அதை பயன்படுத்திக் கொள்ள நினைக்கின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.

முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவிக்கப்பட்டதற்கு முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதை அடுத்து, சர்ச்சை கருத்து தெரிவித்த பா.ஜ.க. கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மற்றும் டெல்லி ஊட பிரிவி அதிகாரி நவீன் குமார் ஜிந்தல் ஆகியோர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

click me!