நுபுர் சர்மா வார்த்தைகள் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கிவிட்டது; லெப்ட் ரைட் வாங்கிய நீதிமன்றம்

By vinoth kumar  |  First Published Jul 1, 2022, 12:01 PM IST

தனது தேவையற்ற வார்த்தைகளால் நாடு முழுவதும்  வன்முறை தீயை பற்ற வைத்து விட்டுள்ளார். நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. 


தனது தேவையற்ற வார்த்தைகளால் நாடு முழுவதும்  வன்முறை தீயை பற்ற வைத்து விட்டுள்ளார். நுபுர் சர்மாவுக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளது. 

இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா அவதூறாக விமர்சித்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரியளவில்  கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சர்வதேச நாடுகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் கருத்து… ராஜஸ்தான் டெய்லர் கொடூரமாக வெட்டி படுகொலை!!

அப்போது, நீதிபதிகள் ஜனநாயகம் அனைவருக்கும் பேச்சுரிமையை வழங்கியுள்ளது. அது  ஜனநாயகத்தின் வரம்பை மீற அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் ஒரு சிக்கலை எவ்வாறு விவாதிக்க முடியும். ஒரு கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பதாலேயே எதையும் சொல்லிவிட முடியாது.  உதய்பூரில் நடந்த தையல்காரரின் கொலைக்கு நூபுர் சர்மாவின் பொறுப்பற்ற செயல்களே காரணம். நூபுர் சர்மா நடந்து கொண்ட விதம், அதன்பிறகு அவரது வழக்கறிஞர்கள் சொல்வது எல்லாம் வெட்கக்கேடானது.

இதையும் படிங்க;-  ராஜஸ்தான் டெய்லர் கொலை செய்யப்பட்ட விவகாரம்… ஐந்து மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது!!

நுபுர் சர்மாவும், அவரது வார்த்தைகளும் ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கரையாக்கிவிட்டது. தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டு மக்களிடம் நூபுர் சர்மா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர். இதனையடுத்து, முகமது நபி குறித்த கருத்தால் பல மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றக்கோரி பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

click me!