12 கோடிபேர் உடனடியாக பலியாவார்கள்: இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால் இதுதான்நிலை: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

By Selvanayagam PFirst Published Oct 4, 2019, 8:14 AM IST
Highlights

இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் ஒருவேளை அணு ஆயுதப் போர் மூண்டால் உடனடியாக 12 கோடி பேர் கொல்லப்படுவார்கள், உலக அளவில் மிகப்பெரிய காலநிலை பேரழிவையும் சந்திக்க வேண்டியது இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இந்த சூழலில் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புஅந்தஸ்தையும், 370 பிரிவையும் மத்திய அரசு நீக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தையும் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு எதிராகப் பேசி வருகிறது. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடைேய அணு ஆயுதப்போர் ஏற்படலாம் என்று அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் மிரட்டி வருகிறார்.

இந்த சூழலில்அமெரிக்காவில் உள்ள நியூபர்ன்ஸ்விக் நகரின் ரட்ஜெர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆலம் ரோபாக், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடந்தால் ஏற்படும் விளைவு குறித்து ஜர்னல் சயின்ஸ் அட்வான்சஸில் கட்டுரை வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணுஆயுதப் போர் வரக்கூடாது. ஏனென்றால், இரு நாடுகளிடமும் தற்போது கைவசம் 200 அணுகுண்டுகள் இருக்கின்றன. 2025-ம் ஆண்டில் இது 500 ஆகக்கூட அதிகரிக்கலாம். ஒருவேளே இரு நாடுகளுக்கு இடையே அணு ஆயுதப்போர் ஏற்பட்டால் அது உலகின் பேரழிவாகத்தான் இருக்கும். போர் தொடங்கியவுடனே இருதரப்பிலும் சேர்த்து 12 கோடிபேர் உடனடியாகக் கொல்லப்படுவார்கள்.

அணு குண்டு வீசப்பட்ட இடத்தில் மட்டும் அதன் பாதிப்பு இருக்கப்போவதில்லை அதன் பாதிப்பு ஒட்டுமொத்த உலகத்திலும் எதிரொலிக்கும், பல்வேறு விளைவுகளையும் ஏற்படுத்தும்.

நிலத்தின விளைச்சல் தன்மை குறைந்துவிடும், உலகளவில் 15 முதல் 30 சதவீதம் வரை நிலத்தின் விளைச்சல் தன்மை மாறிவிடும், கடல்பகுதியில் ஏற்படும் மாற்றத்தால் 5 முதல் 15 சதவீதம் உற்பத்தி பாதிக்கும். இந்தியா, பாகிஸ்தான் மக்கள் மிகப்பெரிய பட்டினியை, வறட்சியை சந்திப்பார்கள்.

அணுகுண்டு வீசப்படுவதால் ஏற்படும் கரும்புகை, சில கரும்புள்ளிகள் சூரிய ஒளியை மறைக்கும் அளவுக்கும், வளிமண்டலத்தில் பெரும் பாதிப்பை சில வாரங்களுக்கு ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், சூரிய ஒளியை கிரகித்து, காற்றை சூடாக்கி, புகையை அதிகரிக்கும். சூரிய ஒளி பூமிக்கு வரும் அளவு 15 முதல் 20 சதவீதம் குறைந்து, பூமியின் குளிர் 2 முதல் 5 செல்சியஸ் அதிகரிக்கும். உலகளவில் மழை பெய்யும் அளவும் 15 முதல் 20 சதவீதம் குறையும். இந்த இரு காரணிகளால் உலகளவில் மனிதர்களிடத்திலும், மற்ற உயிர்கள், பயிர்கள், மரங்கள் ஆகிய இடத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த பாதிப்பு குறைய குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ஆகலாம். 9 நாடுகளிடம் அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்றாலும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள்தான் வேகமாக அணு ஆயுதத்தை பெருக்கிக்கொண்டன

காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்்ந்து ஏற்பட்டுவரும் அமைதியற்ற சூழல் ஒரு கட்டத்தில் அணு ஆயுதப்போருக்கு இட்டுச் செல்லும். 2025-ம் ஆண்டில் அணு ஆயுதத்தின் வெடிக்கும் திறன் 15 கிலோடன்னாக மாறும். ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணு குண்டுபோல் பன்மடங்கு திறன்பெற்றவை.

ஒவ்வொரு அணுகுண்டு 70 லட்சம் மக்களை கொல்லும் திறன்படைத்தவை. அணு குண்டு வீச்சு நடந்தால் இரு நாடுகளிலும் சேர்த்து உடனடியாக 12 கோடி அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். உலகளவில் மிகப்பெரிய பட்டினிச்சாவுகள் நிகழும். ஆதலால், அணு ஆயுதங்களை எந்தவிதமான இக்கட்டான சூழிலும் உலக நாடுகள் பயன்படுத்தக்கூடாது அதற்கான நியாயங்களை கற்பித்து பயன்படுத்தவும் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!