34 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ்க்கு குடைபிடித்த அமெரிக்க ப்ரெசிடெண்ட்... காரணமே இல்லாமல் வைரலாகும் பழைய வீடியோ!!

By sathish kFirst Published Oct 3, 2019, 5:26 PM IST
Highlights

34 ஆண்டுகளுக்கு முன்பு1985 ல் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் வைரலாகி வருகிறது.

பிரதமருக்குதான் மரியாதையே தவிர ஏதோ மோடிக்கு மரியாதை அல்ல என்ற தலைப்புடன் ஒரு வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இந்தியா பிரதமர்களுக்கு மரியாதையே கிடையாது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பிஜேபியினருக்கு இந்த வீடியோ சமர்ப்பணம் என ராஜீவ் காந்திக்கு குடைபிடித்து வரும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

மோடி பிரதமர் ஆவதற்கு முன்பும் இந்தியா இருந்தது! அது இதைவிட சிறப்பானதாகவும் உலக அரங்கில் பெரும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது என்பதற்கு இந்த வரலாறே சாட்சி எனவும் பதிவிட்டுள்ளார்.  

"

34 ஆண்டுகளுக்கு முன்பு1985 ல் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் இது, அவருக்கு குடை பிடித்து கார் வரை சென்று வழியனுப்பி வைப்பவர் யார் என்று தெரிகிறதா? ஆம்! அன்றைய அமெரிக்க பிரசிடன்ட் ரொனால்ட் ரீகன் தான் அது. காரணமே இல்லாமல் காங்கிரஸ் இந்த வீடியோவை வைரக்குவதால், மோடிக்கு உலக நாடுகளில் கிடைக்கும் மரியாதையை பார்த்து, கடுப்பில் காங்கிரஸ் இப்படியான வேலை பார்ப்பதாக தெறிக்கவிடுகிறது. 

click me!