குளத்துல சுறா மீன்கூட கிடைத்துவிடும்... கோர்ட்டுல ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்கவே கிடைக்காது போல..?

Published : Oct 03, 2019, 01:21 PM IST
குளத்துல சுறா மீன்கூட கிடைத்துவிடும்... கோர்ட்டுல ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைக்கவே கிடைக்காது போல..?

சுருக்கம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடநற்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்தனர். அக்டோபர் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அவரை வைக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் தொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அதில், ப.சிதம்பரம் ஜாமீனுக்கு சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ப.சிதம்பரத்தை வெளியில் விட்டால் சாட்சியங்களை அழித்துவிடுவார் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐ கோரிக்கை ஏற்று ப.சிதம்பரம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.  

இதையடுத்து ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி சிதம்பரத்தின் வழக்கறிஞர் கபில் சிபல் கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களறியான காதல் திருமணம்.. சண்டையில் மணமகனின் மூக்கை அறுத்த பெண் வீட்டார்!
Ola–Uber-க்கு டஃப் போட்டி.. மத்திய அரசின் பாரத் டாக்ஸி.. பயணிகளுக்கு குறைந்த கட்டணம்!