டெல்லியில் 12 வகுப்பு மாணவியின் மீது ஆசிட் வீசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டவர்கள் ஆன்-லைனில் ஆசிட் வாங்கியுள்ளனர். இதையடுத்து பிளிப்கார்ட், அமேசானுக்கு டெல்லி மகளிர்ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் 12 வகுப்பு மாணவியின் மீது ஆசிட் வீசிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டவர்கள் ஆன்-லைனில் ஆசிட் வாங்கியுள்ளனர். இதையடுத்து பிளிப்கார்ட், அமேசானுக்கு டெல்லி மகளிர்ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லியில் துவரகா பகுதியில் நேற்று 17வயதுள்ள மாணவியும், அவரின் சகோதரியும் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, பைக்கில் வந்த இருவர், அந்த மாணவியின் முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பினர். இது அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்தது.
பெண்களை நசுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு! ஒரு உறுப்பினர்கூட இல்லை: ராகுல் காந்தி விளாசல்
முகத்தில் ஆசிட் பட்டத்தில் வலியால் துடித்த அந்த மாணவியை உடனடியாக சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் சகோதரியிடம் விசாரணை நடத்தி தகவல்களைப் பெற்று 3 பேரைக் கைது செய்தனர்.
சச்சின் அரோரா(வயது20) என்ற இளைஞர் அந்த மாணவியை காதலித்துள்ளார். ஆனால், அந்த மாணவி காதலுக்கு மறுத்துள்ளார். இதையடுத்து, தனது நண்பர்கள் ஹர்சித் அகர்வால்(வயது19), வீரேந்திர சிங்(22) ஆகியோரின் உதவியுன் அந்த மாணவி மீது ஆசிட்டை வீசியுள்ளார்.
சச்சின் மற்றும் ஹர்சித் இருவரும் அந்த மாணவியின் மீது ஆசிட் வீசினர், ஆனால், வீரேந்திரர் சச்சினின் ஸ்கூட்டர், மொபைல் போனை எடுத்துக்கொண்டு வேறு இடத்துக்குச் சென்று போலீஸாரை விசாரணையில் குழப்பிவிடத் திட்டமிட்டிருந்தார்.
இந்த சம்பவம் நடந்த 12 மணிநேரத்துக்குள் போலீஸார் இந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த மாணவி மீது ஆசிட் வீசுவதற்கு ஆன்-லைனில் ஆசிட் வாங்கியதாகத் தெரிவித்தனர்.
பிளிப்கார்ட் தளத்தில் சச்சின் அரோரா தனதுஇ வாலட்டைப் பயன்படுத்தி ஆசிட் வாங்கியுள்ளார். 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆசிட்டை யாரும் சில்லறையில் விற்பனை செய்யக்கூடாது. ஆசிட் விற்பனை செய்ய உரிமம் பெற்ற கடை உரிமையாளர்கள்தான் ஆசிட்டை விற்க வேண்டும் என விதிகள் வகுத்துள்ளது.
இந்தியா சீனா எல்லை மோதல்: இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
அதை மீறி பிளிப்கார்ட் நிறுவனம் ஆசிட்டை விற்பனை செய்துள்ளது.
இதையடுத்து, டெல்லி மகளிர் ஆணையம், ஆன்-லைனில் ஆசிட் எளிதாகக் கிடைப்பது குறித்து விளக்கம் அளிக்க பிளிப்கார்ட் மற்றும் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஆசிட் வாங்குவது கடையில் காய்கறிகள் வாங்குவது போன்று எளிதாகிவிட்டது. சில்லறையில் ஆசிட் விற்கக்கூடாது என்று ஆணையம்பரிந்துரைத்தும் விற்பனை செய்தது துரதிர்ஷ்டம். ஆசிட் வெளிச்சந்தையில் எந்தவிதமான பரிசோதனையும் இன்றி விற்கப்படுகிறது. சில்லறையில் ஆசிட் விற்பனைக்கு அரசு தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்