Rahul Gandhi:RSS: பெண்களை நசுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு! ஒரு உறுப்பினர்கூட இல்லை: ராகுல் காந்தி விளாசல்

By Pothy Raj  |  First Published Dec 15, 2022, 11:44 AM IST

ஆர்எஸ்எஸ் அமைப்பு பெண்களை நசுக்குகிறது. அந்த அமைப்பில் அதனால்தான் ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளாசியுள்ளார்.


ஆர்எஸ்எஸ் அமைப்பு பெண்களை நசுக்குகிறது. அந்த அமைப்பில் அதனால்தான் ஒரு பெண் உறுப்பினர்கூட இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விளாசியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணம் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 7ம் தேதி தொடங்கிய நடைபயணம் தமிழகம், கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம் மாநிலங்களைக் கடந்து, தற்போது ராஜஸ்தானில் சென்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

:2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுங்கள்:பாஜக எம்.பி. சுஷில் மோடி கூற காரணம் என்ன?

இந்நிலையில் 10-வது நாளாக ராஜஸ்தானில் ராகுல் காந்தி நடைபயணம் செய்து வருகிறார். இந்நிலையில் தவுசா மாவட்டம், பக்டி கிராமத்தில் நடைபயணத்தில் இருந்தபோது ராகுல் காந்தி பேசியதாவது: 

ஆர்எஸ்எஸ் அமைப்பிலும், பாஜக அமைப்பிலும் ஒரு பெண் உறுப்பினரைக் கூட பார்க்க முடியாது. ஆர்எஸ்எஸ் அமைப்பு பெண்களை நசுக்குகிறது. தங்கள் அமைப்புக்குள் பெண்களை நுழையவிட அனுமதிக்கமாட்டார்கள்.

ராகுலுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்!பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று நடந்தார்

ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக அமைப்பினரிடம் கேட்கிறேன், நீங்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்கிறீர்கள். ஆனால், ஏன் நீங்கள் ஜெய் சியாராம் என சொல்வதில்லை. ஏன் நீங்கள் சீதா தேவியை புறக்கணிக்கிறீர்கள். எதற்காக அவரை உதாசினப்படுத்துகிறீர்கள். இந்தியப் பெண்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்.

மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக மட்டும்தான் பயன் பெறுகிறார்கள். அவர்கள் அச்சத்தை வெறுப்பாக மாற்றுகிறார்கள். அந்த இரு அமைப்பு முழுவதும் இதைத்தான் செய்கிறார்கள். நாட்டை பிளவுபடுத்தி, வெறுப்பையும், அச்சத்தையும் விதைக்கிறார்கள். பாரத் ஜோடோ யாத்திரையின் முக்கிய நோக்கமே நாட்டில் பரப்பப்படும் அச்சம், வெறுப்புக்கு எதிராக திரண்டு, எதிர்த்து நிற்க வேண்டும் என்பதற்காகத்தான். 

இந்த நாட்டில் உள்ள 100 கோடீஸ்வரர்களிடம் 55 கோடி மக்களின் சொத்து இருக்கிறது.  பாதிக்கு மேற்பட்ட மக்களின் சொத்து, குறிப்பிட்ட சிலரிடம் முடங்கியுள்ளது, அவர்களுக்காகவே இந்த தேசம் இயங்குகிறது.
இந்தியாவின் மகாராஜாவாக 4 அல்லது 5 பேரை அழைக்கலாம். ஒட்டுமொத்த அரசு, அனைத்து ஊடகங்கள், அதிகாரிகள் அந்த மகாராஜாக்கள் நலனுக்காகவே உழைக்கிறார்கள். பிரதமர் மோடியும் அந்த மகாராஜாக்கள் நலனுக்காகவே உழைக்கிறார்

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்
 

click me!