2,000 Currency News:2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுங்கள்:பாஜக எம்.பி. சுஷில் மோடி கூற காரணம் என்ன?

By Pothy RajFirst Published Dec 15, 2022, 9:33 AM IST
Highlights

நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை படிப்படியாகத் திரும்பப் பெறுங்கள் என்று பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை படிப்படியாகத் திரும்பப் பெறுங்கள் என்று பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரத்தில் எழுந்து பாஜக எம்.பி. சுஷில் குமார் மோடி பேசுகையில்  “ நாட்டில் பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் இருந்து 2ஆயிரம் நோட்டு வைக்கப்படுவது ஏறக்குறைய நிறுத்தப்பட்டுள்ளது. 2 ரூபாய் நோட்டை மத்தியஅரசு செல்லாது என விரைவில் அறிவிக்கப்போகிறது என்ற வதந்தியும் பரவி வருகிறது.

ஆசை யாரை விட்டுச்சு!கிட்னி விற்பனையில் ரூ.7 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.16 லட்சத்தை இழந்த மாணவி

கடந்த 3 ஆண்டுகளாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை அச்சடித்தலும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டாலும் அதனால் பல்வேறு சவால்களை அரசு எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

ரூ.1000 நோட்டை செல்லாது என அறிவித்துவிட்டு, அதற்குப் பதிலாக ரூ.2 ஆயிரம் நோட்டை அறிமுகப்படுத்தியதில் எந்தவிதமான தர்க்கமும் இல்லை.வளர்ந்துவிட்ட நாடுகளில் பார்த்தால் அதிக மதிப்புள்ள கரன்ஸிக்களை நாம் பார்க்க முடியாது.

ஆதலால் மத்திய அரசு படிப்படியாக ரூ.2ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நிறுத்த வேண்டும். 2ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அதை திருப்பி ஒப்படைக்க 2 ஆண்டுகள் வரை அவகாசம் கொடுக்கலாம். 

கறுப்புப் பணத்தை பதுக்குவதற்கு எளிய நடைமுறையாக இப்போது 2ஆயிரம் நோட்டு வந்துவிட்டது. தீவிரவாதத்திற்கு நிதியளித்தல், பணமோசடி, ஊழல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான பெரிய பண அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு 2ஆயிரம் ரூபாய் நோட்டு உதவுகின்றன.

‘பயப்பட தேவையில்லை.. எல்லாம் சரியா இருக்கு.. நாங்க இருக்கோம்’ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி !

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு இந்தியா மாறிவரும் நிலையில், அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மிகக்குறைவாகவே தேவைப்படுகிறது. ஆதலால், மத்திய அ ரசு படிப்படியாக ரூ.2 ஆயிரம் நோட்டுகளை  புழக்கத்தில் இருந்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு போதுமான கால அவகாசத்தை மத்திய அ ரசு மக்களுக்கு வழங்க வேண்டும். 2 ஆயிரம் நோட்டுகளை வைத்திருக்கும் மக்கள் அதை வங்கியில் கொடுத்து வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும்

இப்போ சொல்லுங்க யார் ‘பப்பு’? சொல்லுங்க.? டேட்டாவை சொல்லி நாடாளுமன்றத்தை அதிர வைத்த திரிணாமுல் எம்.பி

இவ்வாறு சுஷில் குமார் மோடி தெரிவித்தார்

கடந்த 2016ம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டுவந்தபோது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்தது. அதன்பின் ரூ.2ஆயிரம் நோட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது
 

click me!