திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி மஹுவா மொய்த்ரா தொழில்துறை உற்பத்தியில் அதன் சொந்த தரவுகளை மேற்கோள் காட்டி, மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மக்களவையில் 2022-23ஆம் ஆண்டிற்கான கூடுதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசனார் திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி மஹுவா மொய்த்ரா.
அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றி நரேந்திர மோடி அரசாங்கம் தவறான தகவல்களை பரப்புவதாகக் குற்றம் சாட்டினார். தொழில்துறை உற்பத்தி குறியீட்டை உருவாக்கும் தொழில் துறைகளில் 17 எதிர்மறையான வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளது.அந்நிய செலாவணி கையிருப்பு ஒரு வருடத்திற்குள் $72 பில்லியன் குறைந்துள்ளது.
அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள், வீடுகள் மற்றும் மின்சாரம் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கிறது என்று பிப்ரவரி மாதம்தோறும் மத்திய அரசு பொதுமக்களை நம்ப வைக்கப் பார்க்கிறது. மத்திய அரசு கூறியது அனைத்தும் பொய். கடந்த 8 மாதங்களாக இந்திய பொருளாதாரம் தள்ளாடி வருகிறது. மத்திய அரசுக்குச் செலவுகளைச் சமாளிக்க பட்ஜெட் மதிப்பீட்டை விட கூடுதலாக ரூ.3.26 லட்சம் கோடி நிதி தேவை என்று அரசே கூறியுள்ளது.
இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
பப்பு என்ற சொல்லை உருவாக்கியது இந்த அரசாங்கமும் ஆளும் கட்சியும்தான். இழிவுபடுத்தவும் திறமையின்மையை குறிக்கவும் அந்த வார்த்தையை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உண்மையான பப்பு யார் ? என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றது. அதை பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. அக்டோபர் மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 26 மாதங்களில் இல்லாத அளவிற்கு நான்கு சதவீதம் சரிந்தது. மிகப்பெரிய வேலைகளை உருவாக்கும் உற்பத்தித் துறை 5.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஆளுங்கட்சியின் தலைவரால் தனது சொந்த மாநிலத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. இப்போது சொல்லுங்கள் யார் பப்பு ? நேற்று கேள்வி நேரத்தின் போது, வளர்ந்து வரும் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் 50% வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இந்தியாவிற்குள் வருவதாக நிதி மந்திரி குறிப்பிட்டார். ஆனால் வெளியுறவுத்துறை இணை மந்திரி, கடந்த வெள்ளிக்கிழமை, இதே அவையில் ஒரு தகவலை தெரிவித்தார். அதாவது இந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர், தங்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக கூறியிருந்தார்.
2014 முதல் சுமார் 12.5 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளனர். செல்வந்தர்கள் பணம் செலுத்தி மற்ற நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள். இதுதான் ஆரோக்கியமான பொருளாதாரச் சூழலின் அறிகுறியா ? இப்போது சொல்லுங்கள் யார் பப்பு ? ஆளுங்கட்சி பல நூறு கோடியை செலவழித்து மக்கள் பிரதிநிதிகளை வாங்குகிறது. அதேநேரம் அமலாக்கத்துறை விசாரிக்கும் 95 சதவீத வழக்குகள் எதிர்க்கட்சி உறுப்பினர்களைக் குறி வைத்தே இருக்கிறது என்று கடுமையாக விமர்சித்து பேசினார் திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி மஹுவா மொய்த்ரா.
இதையும் படிங்க..அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடலாம்.. உதயநிதி ஸ்டாலின் நடிக்க கூடாதா ? விஷால் கொடுத்த பதிலடி !