ஹைதராபாத்தைச் சேர்ந்த 16வயது மாணவி, கிட்னி விற்க எண்ணி, ரூ.7 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.16 லட்சத்தை இழந்துள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 16வயது மாணவி, கிட்னி விற்க எண்ணி, ரூ.7 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.16 லட்சத்தை இழந்துள்ளார்.
ஹைதராபாத் சைபர் செல் போலீஸார் தரப்பில் கூறப்படுவதாவது
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் ராகினி. ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார். தனது தந்தையின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை ஷாப்பிங்கிற்காக செலவிட்டுள்ளார். இதை எவ்வாறு தந்தையிடம் கூறுவது, பணத்தை செலுத்துவது எனத் தெரியாமல் ராகினி திணறியுள்ளார்.
சீனாவில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது ‘சைபர் தாக்குதல்’: அதிர்ச்சித் தகவல்
ராகினி தோழிகள், நண்பர்கள், சிறுநீரகத்துக்கு நல்ல விலை கிடைக்கும், சிறுநீரகத்தை விற்பனை செய்துவிடு என்று நகைச்சுவைக்காக கூறியுள்ளார். ஆனால், இதை நம்பி ராகினி ஆன்லைனில் சிறுநீரக விற்பனை தொடர்பாக தேடியுள்ளார்.
அப்போது, கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைனில் கிட்னி விற்பனை தொடர்பான ஒரு விளம்பரத்தை ராகினி பார்த்துள்ளார். அதில் ஒரு சிறுநீரகத்துக்கு ரூ.7 கோடி தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. சிறுநீரகம் விற்பனை தொடர்பாக இளம் மருத்துவர் பிரவீண் ராஜ் என்பவரை தொடர்பு கொள்ளவும், அவரின் செல்போன், மின்அஞ்சல்,வாட்ஸ்அப் எண் தரப்பட்டிருந்தது.
இந்தியா சீனா எல்லை மோதல்: இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
இதை நம்பி மாணவி ராகினி மருத்துவர் பிரவீணைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரும், ராகினி நம்பும் விதமாகப் பேசி, ரூ.10ஆயிரத்தை அனுப்பி உடற்பரிசோதனை செய்து அறிக்கை அனுப்பக் கோரியுள்ளார். தனக்கு ரூ.10ஆயிரம் அனுப்பி உடற்பரிசோதனை செய்யக் கூறியதால் உண்மை என நம்பி, ராகினியும் பரிசோதனை செய்து அறிக்கையை மருத்துவர் பிரவீணுக்கு அனுப்பியுள்ளார்.
அதன்பின் மாணவி ராகினியிடம் பல்வேறு ஆவணங்கள் தயாரிக்கவும், சட்டரீதியான பணிகள் செய்யவும், அனுப்ப அவ்வப்போது பிரவீண் கோரியுள்ளார். மேலும், சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு முன்பாக ரூ.3.50 கோடி டெபாசிட் செய்யப்படும், அறுவை சிகிச்சை முடிந்தபின் ரூ.3.50 கோடி டெபாசிட் செய்யப்படும் என்று பிரவீண் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இருந்து ரூ.3.50 கோடி பரிமாற்றம் செய்யப்பட்ட விவரத்தையும் பிரவீண் கூறி ராகினியை நம்பவைத்துள்ளார்.
தனது தந்தைக்கு தெரியாமல் அவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை எடுத்து ரூ.16 லட்சம் வரை ராகினி இழந்துள்ளார். இதையடுத்து, சந்தேகமடைந்த ராகினி தனது தந்தையிடம் தெரிவிக்கவே அவர்கள் மூலம் போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸார் ஐபிசி 420 மற்றும் ஐடி சட்டம் 66டிபிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
எல்லையில் மோதிக்கொண்ட இந்தியா - சீனா ராணுவம்.. அருணாச்சல பிரதேசத்தில் நடப்பது என்ன ? முழு விபரம் !
குண்டூர் சைபர் கிரைம் துணை ஆய்வாளர் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவர் வெங்கட கிருஷ்ணா கூறுகையில் “ மாணவி ராகினி ஆன்லைனில் வந்த விளம்பரத்தைப் பார்த்து சிறுநீரக விற்பனையில் ரூ.7 கோடி கிடைக்கும் என நம்பி, ரூ.16 லட்சத்தை இழந்துள்ளார். மோசடியில் ஈடுபட்ட மருத்துவர் பிரவீணுக்கும், ரானிக்கும் இடையே போன்பே செயலி மூலம் 50 பிரமாற்றங்கள் நடந்துள்ளன.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 16வயது மாணவி, கிட்னி விற்க எண்ணி, ரூ.7 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.16 லட்சத்தை இழந்துள்ளார்.
ராகினியை நம்பவைப்பதற்காக முதலில் ரூ.10 ஆயிரத்தை டெபாசிட் செய்து மருத்துவர் பிரவீண் ஏமாற்றியுள்ளார். இதை நம்பிய ராகினி சிறுநீரக விற்பனையாக உண்மையாக இருக்கும் என நம்பி பரிசோதனை செய்துஅறிக்கை அனுப்பியுள்ளார். அதன்பின் பதிவுக்கட்டணம், அறுவைசிகிச்சை, சட்டஒப்புதல் என பல்வேறு காரணங்களைக் கூறி ராகினியிடம் பணத்தை பிரவீண் பெற்றுள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு முன்பாக ரூ.3.50 கோடி தரப்படும் அந்தப் பணமும் தனது வங்கிக்கணக்கிற்கு வந்துவிட்டதாகக் கூறி ராகினியை பிரவீண் ஏமாற்றியுள்ளார். இந்த மோசடியில் ரூ.16 லட்சத்தை ராகினி இழந்துள்ளார். மாணவி ராகினி அதிகமாக செலவிடும்போது வங்கியில் இருந்து செல்போனுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், மாணவியின் பெற்றோர் கல்வியறிவு குறைவானவர்கள் என்பதால், அது குறித்து தெரியவில்லை. தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் எனத் தெரியவந்தபின்புதான் தனது தந்தையிடம் ராகினி உண்மை நிலவரத்தை தெரிவித்துள்ளார். அதன்பின் எங்களிடம் புகார் தரப்படவே நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்