டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மீது கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இருந்து சர்வர்கள், முழுமையாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மீட்டுள்ளார்கள், அதில் உள்ள நோயாளிகளின் விவரங்கள் பாதுகாப்பாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தியா சீனா எல்லை மோதல்: இரு அவைகளில் இருந்தும் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
தேசிய தகவல் மையத்தின் சர்வரில்தான் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர்கள் இயங்கி வருகிறது. கடந்த 23ம்தேதி முதல் எய்ம்ஸ் சர்வர் செயல் இழந்தது .இதனால் வெளிநோயாளிகள் பிரிவு, ரத்த மாதிரிகள் பிரிவு என கணினி தொடர்பான பணிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவமனையின் அனைத்து சேவைகளும் மருத்துவ அலுவலர்கள் மூலம் நேரடியாக செய்யப்பட்டது. இது குறித்து உடனடியாக தேசிய தகவல் மையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தேசிய தகவல் மையத்தின் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ததில் இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். இதையடுத்து, இதுகுறித்து முறைப்படியான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராகுலுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்!பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று நடந்தார்
சர்வர் பழுதடைந்ததால், வெளிநோயாளிகள், உள்நோயாளிகள், டிஜிட்டல் மருத்துவ சேவைகள், ஸ்மார்ட் லேப், பில்லிங், நோயாளிகள் குறித்த அறிக்கை தயாரித்தல், முன்அனுமதிச்சீட்டு பெறுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. இதையடுத்து இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் மற்றும் என்ஐசி ஆகியவை இணைந்து செயல்பட்டு மீட்கும் பணியில் ஈடுபட்டன.
ஏறக்குறைய 20 நாட்களாக தீவிரமாக போராடி, தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் 100 சர்வர்களையும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மீட்டுள்ளனர்.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ கடந்த மாதம் 23ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது, அதன் சர்வர்கள் முடக்கப்பட்டன.
எல்லையில் மோதிக்கொண்ட இந்தியா - சீனா ராணுவம்.. அருணாச்சல பிரதேசத்தில் நடப்பது என்ன ? முழு விபரம் !
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தீவிரமான ஆய்வுகள், முயற்சிகளுக்குப்பின் 100 சர்வர்கள் பத்திரமாக மீட்கப்பட்டன. இதில் சர்வர்களில் ஹேக்கர்கள் புகுந்து, முடக்கினர், இந்த சேதம் கடுமையாக இருந்தது என்றாலும் தற்போது முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. 5 சர்வர்களில் உள்ள புள்ளிவிவரங்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்த சைபர் தாக்குதல் சீனாவில் இருந்து நிகழ்த்தப்பட்டிருக்கிறது, அங்கிருந்து ஹேக்கர்கள் சர்வர்களில் ஊடுருவியுள்ளனர்”எனத் தெரிவித்தனர்.
நோயாளிகளின் விவரங்களைத் திருடுவதுதான் சைபர் தாக்குதலின் நோக்கமாகும். தலைநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சாதாரண நோயாளிகள் முதலம் விஐபிக்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் என பலரும் சிகிச்சை பெறுகிறார்கள். இதை நோக்கமாக வைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 38 லட்சம் பேர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.