
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் 36வது போர்விமானம் இன்று இந்தியா வந்து சேர்ந்தது.
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து, ரூ.59ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர்விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ம் ஆண்டுபிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது.
பெண்களை நசுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு! ஒரு உறுப்பினர்கூட இல்லை: ராகுல் காந்தி விளாசல்
இதில் முதல்கட்டமாக கடந்த 2020ம் ஆண்டு, ஜூலை 29ம் தேதி 5 விமானங்கள் அம்பாலா விமானத் தளத்துக்கு வந்து சேர்ந்தன. அவை முறைப்படி இந்திய விமானப்படையில் அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இணைக்கப்பட்டன. அதன்பின் இரு கட்டங்களாக தலா 3 ரஃபேல் போர் விமானங்கள் என 6 விமானங்கள் இந்தியாவுக்கு வந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவுக்கு கடைசியாக 5 விமானங்களில் 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்தன. இந்த விமானங்கள் அனைத்தும் கோல்டன் ஆரோஸ் படைப்பிரிவில் விரைவில் சேர்க்கப்பட உள்ளது. மொத்தமுள்ள 36 ரஃபேல் போர் விமானங்களில் 35 விமானங்கள் இதுவரை வந்துவிட்டநிலையில் இன்னும் ஒரு விமானம் மட்டும் வர வேண்டியதிருந்தது.
ஏற்கெனவே வந்த 35 ரஃபேல் விமானங்களும் அம்பாலா, ஹரியானா, மேற்கு வங்கத்தின் ஹசிமரா விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுங்கள்:பாஜக எம்.பி. சுஷில் மோடி கூற காரணம் என்ன?
இந்நிலையில் 36வது மற்றும் கடைசி ரஃபேல் போர்விமானம் பிரான்ஸில் இருந்து புறப்பட்டு இன்று இந்தியா வந்து சேர்ந்தது. இதை இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நடுவானில் இந்திய ரஃபேல் விமானத்துக்கு ஐக்கியஅரபு அமீரகத்தில் ஏர்பஸ் விமானம் எரிபொருள் நிரப்பியுள்ளது.
இந்த ரஃபேல் போர்விமானத்தில் அதிநவீன வசதிகள் உள்ளன. வானில் இருந்தே வான் இலக்கை நோக்கி குறிபார்த்து சுடுதல், வானில் இருந்து பூமியிலிருந்து வரும் ஏவுகணைகளை அழிப்பது, அதிநவீன ராடார், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.
ஆசை யாரை விட்டுச்சு!கிட்னி விற்பனையில் ரூ.7 கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.16 லட்சத்தை இழந்த மாணவி
ரஃபேல் போர்விமானத்துக்கான பராமரிப்புப் பணிகளை டசால்ட் நிறுவனம் செய்து வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ள நிலையில், விரைவில் இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானம் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது
இந்திய விமானப்படை ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஒட்டுமொத்த ரஃபேல் விமானமும் வந்துவிட்டது. 36வது மற்றும் கடைசி ரஃபேல் போர்விமானம் இந்தியா வந்து சேர்த்தது. ஐக்கியஅரபுஅமீரகத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தின் உதவியால் விரைவில் வந்து சேர்ந்தது” எனத் தெரிவித்துள்ளது