மல்யுத்த வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் மீது கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை: டெல்லி போலீஸ்

By SG Balan  |  First Published May 31, 2023, 4:18 PM IST

நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கத் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என டெல்லி காவல்துறை கூறியுள்ளது.


நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பிரிஜ் பூஷன் சிங் மீது முன்வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கத் ஆதாரங்கள் கிடைக்கவில்லை என டெல்லி காவல்துறை கூறியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார்களை நிரூபிப்பதற்கும், அவரை கைது செய்வதற்கும் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தில்லி காவல்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

இது தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பிப்பார்கள் என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோடி அரசால் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்த முடியவில்லை.. அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

"இதுவரை நடந்த விசாரணையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரைக் கைது செய்ய போதிய ஆதாரங்களை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை. மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. 15 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்." என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் வீராங்கனைகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி ஏப்ரல் 23ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடந்திவந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கிச் செல்ல முற்பட்டபோது, டெல்லி காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

டெல்லி காவல்துறையினர் மல்யுத்த வீரர் வீராங்கனைகளிடம் மோசமாக நடத்துகொள்ளும் வீடியோக்களும் படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து ஜந்தர் மந்தரில் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி மறுத்தது. 

மக்களை திசை திருப்ப பிரதமர் மோடி செய்த நாடகம் புதிய நாடாளுமன்றம், செங்கோல் ; ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம்!

click me!