வடகொரியாவை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த டிரம்ப்! கொலைவெறியில் கிம் ஜாங் அன்!

 
Published : Nov 22, 2017, 12:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
வடகொரியாவை பயங்கரவாத பட்டியலில் சேர்த்த டிரம்ப்! கொலைவெறியில் கிம் ஜாங் அன்!

சுருக்கம்

North Korea in terror list

வடகொரியா, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைச்சரவையில் பேசும்போது, வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அமெரிக்கா அறிவிப்பதாக கூறினார். இது சில ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். வடகொரியா அணு ஆயுதங்கள் மூலம் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. சர்வதேச பயங்கரவாதத்துக்கு அந்நாடு ஆதரவு அளித்து வருகிறது.

வடகொரியா நாடு ஏற்கனவே பயங்கரவாத பட்டியலில் இருந்த நிலையில், ஜார்ஜ் டபிள்யு புஷ் அதிபராக இருந்தபோது அதனை நீக்கினார். இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் பயங்கரவாதத்தை  ஆதரிக்கும் நாடு என்று அறிவித்துள்ளார்.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை, கொரிய தீபகற்பத்தில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் வடகொரியாவை, அமெரிக்கா மீண்டும் சேர்த்துள்ள நிலையில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பை, ஜப்பான் வரவேற்றுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!