இனி ரேஷன் கார்டுக்கு சர்க்கரை இல்லை ? - மக்களுக்கு மத்திய அரசு வைக்கும் ஆப்பு

Asianet News Tamil  
Published : Jan 27, 2017, 10:05 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
இனி ரேஷன் கார்டுக்கு சர்க்கரை இல்லை ?  - மக்களுக்கு மத்திய அரசு வைக்கும் ஆப்பு

சுருக்கம்

ரேஷன் கார்டுக்கு சலுகை விலையில் சர்க்கரை வழங்குவது நிறுத்தப்படும் என தெரிகிறது. மத்திய அரசு மானியத்தை நிறுத்துவதால் அனைவருக்குமான சர்க்கரை நிறுத்தப்படும் என தெரிகிறது.

சர்க்கரை மானியத் திட்டத்தின்படி, பொதுச் சந்தையிலிருந்து சர்க்கரை கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகள் மூலம் அதை கிலோ ரூ.13.50 என்ற மானிய விலையில் மாநில அரசுகள் விற்பனை செய்து வருகின்றன. 32 ரூபாய்க்கு விற்கப்படவேண்டிய சர்க்கரையை ரேஷன் கார்டுகள் மூலம் சலுகை விலையில் ரூ.13.50 க்கு மாநில அரசுகள் வழங்கி வருகின்றன.

இதற்காக, கிலோ ஒன்றுக்கு ரூ.18.50 வீதம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தால் நாடுமுழுதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 40 பயனாளிகள் மானியவிலையில் ரேஷன் அட்டைகள் மூலம் சர்க்கரை பெறுகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அரசு அடுத்த மாதம் தாக்கல் செய்யவிருக்கும் புதிய பட்ஜெட்டில், சர்க்கரை மானியத்தை நிறுத்த முடிவு செய்து அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வருவதால்  வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் யார் என்று வரையறுக்கப்படாத நிலையில், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது சரியானதாக இருக்காது என்று மத்திய அரசு கருதுவதால் இந்த முடிவு என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அடுத்த நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் சர்க்கரை மானிய திட்டத்தைக் கைவிட மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்ப்டுகிறது. அவ்வாறு நிறுத்தப்பட்டால் மத்திய அரசுக்கு ரூ.4,500 கோடி மிச்சமாகும் என தெரிகிறது.

இதை முற்றிலும் கைவிட வேண்டாம் என உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே, சர்க்கரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்யலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உணவுத் துறை அமைச்சகம் தெரியப்படுத்தியிருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு ரத்து செய்தால் மாநில அரசுகள் கூடுதல் சுமையை ஏற்று சர்கரைக்கான மானியத்தை வழங்குமா? அல்லது ரேஷன் அட்டையில் சர்கரை ரத்து செய்யப்படுமா? என்பது கேள்விக்குறி. முதல்வர் எம்ஜிஆர் வெற்றியின் ரகசியமே சாதாரண மக்களின் அடிப்படையான மண்ணெண்ணெய் , சர்க்கரை , அரிசியில் கைவைக்க கூடாது என்பதே. 

PREV
click me!

Recommended Stories

செம காண்டு.. கழுதைய வச்சு இழுத்தும் யூஸ் இல்ல.. ஷோரூம் முன்பே ஆட்டோவை கொளுத்திய இளைஞர்!
சோஃபாவில் இருந்து எழுந்தபோது இடுப்பிலிருந்த துப்பாக்கி வெடித்து NRI இளைஞர் உயிரிழப்பு!