விலங்குகள் நல வாரியத்தை ஏமாற்றி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு - உடனே திரும்பப் பெற உத்தரவு…

Asianet News Tamil  
Published : Jan 27, 2017, 09:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
விலங்குகள் நல வாரியத்தை ஏமாற்றி ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு - உடனே திரும்பப் பெற உத்தரவு…

சுருக்கம்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும்

அறவழியில் போராடினர். இதனால் மத்திய,மாநில அரசுகள் அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தனர்.

மேலும் இச்சட்டம் தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில்

நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் தமிழக

அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில்

அதன் உறுப்பினர் அஞ்சலி சர்மாஉள்ளிட்ட சிலர், தனிப்பட்ட முறையில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் 

செய்துள்ளனர்..உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 30 ஆம் தேதி விசானைக்கு வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் 

செய்துள்ள மனுக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியவிலங்குகள் நல வாரியம்

 அதன் உறுப்பினர்களுக்கு  உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அஞ்சலி சர்மாவுக்கு, வாரியத்தின் செயலர் ரவிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில்,

"தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் தொடர்பான விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத் திருத்தத்தை

எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வாரியத்தின் உறுப்பினர்கள் சிலர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக

 ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. 

அத்தகைய மனுக்களை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில்தாக்கல் செய்திருந்தால் உடனடியாக 

அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

.
ஜல்லிக்கட்டு தொடர்புடைய நீதிமன்ற வழக்குகளில் வாரியம் சார்பில் எந்தவொரு மனுவையும் 

தாக்கல் செய்யும் முன்பாக முறைப்படி வாரியத்தின் ஒப்புதலை உறுப்பினர்கள் பெறுவது அவசியம்' 

என்று அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெரு நாய்கள் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவை 

எதிர்த்து அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 

இதில்இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்வதற்கான அனுமதி, 

வாரியத்தின் உறுப்பினர் அஞ்சலி சர்மாவுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த அனுமதியை 

அடிப்படையாக வைத்து,அஞ்சலி சர்மா சார்பில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் விலங்குகள் நல வாரியத்தின் செயலரை தவறாக வழிநடத்தி அவரது அனுமதியை 

அஞ்சலி சர்மா பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அவரது பெயரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க 

முகாந்திரம் உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

சென்னையில் விமான சேவை குறைப்பு : பயணிகள் கடும் அவதி! நிலைமை சீரடையுமா?
Instagram Friendship: இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல்.. ஒரே இரவில் மாறிய பெங்களூரு இளம் ஜோடியின் கதை