"இப்போ தேர்தல் வைத்தாலும் பா.ஜ.க. தான் ஜெயிக்கும்…" சொல்கிறது இந்தியா டுடே சர்வே ரிப்போர்ட்…

Asianet News Tamil  
Published : Jan 27, 2017, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
"இப்போ தேர்தல் வைத்தாலும் பா.ஜ.க. தான் ஜெயிக்கும்…" சொல்கிறது இந்தியா டுடே சர்வே ரிப்போர்ட்…

சுருக்கம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கூறப்பட்டது, 

மேலும் இந்த நடிவடிக்கை பொது மக்களை பெரிதும் பாதித்துள்ளதால் மோடி மீது அவர்கள் வெறுப்பில் உள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன,

இந்நிலையில் தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என Indai Today மற்றும் karvy Insights ஆகிய நிறுவனங்கள் சர்வே நடத்தின.

இதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசு பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

தேசிய முற்போக்கு கூட்டணி 360 இடங்களை கைப்பற்றும் என்றும், பா.ஜ.க. தனித்து நின்றால் 305 இடங்களை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மோடிதான் என்று 65 சதவீதத்தினரும்,ராகுல் காந்திக்கு 10 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழியும் என்று 45 சதவீதத்தினரும், பொருளாதாரத்திற்கு உதவியாக இருக்கும் என்று 35 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.

மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு 60 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்திரா காந்தி,வாஜ்பாய் ஆகியோரைவிட நரேந்திர மோடி சிறந்த பிரதமராக விளங்குகிறார் என்று பெரும்பான்மையோர் கூறியுள்ளனர்.

இந்தியாவில் செல்வாக்கு மிக்கவர்களில் மோடி முதல் இடத்தையும், நிதீஸ்குமார் இரண்டாவது இடத்தையும், மம்தா பானர்ஜி  3 ஆவது இடத்தையும்,அரவிந்த் கெஜ்ரிவால் 4 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நீங்க இதை பார்த்ததில்லையே.? சிக்கன் நெக் மிரட்டலுக்கு நாகாலாந்து அமைச்சர் விடுத்த வார்னிங்
நாங்க கிராமத்தான் இல்ல, மிலிட்டரி காரண்டா..! கிராம மக்களுக்கு ராணுவ பயிற்சி.. மோடி அரசின் மாஸ்டர் ஸ்ட்ரோக்