"இனிமே நான் தரையிலேயே உட்கார்ந்துக்கிறேன்" - அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அதிரவைத்த ஆதித்யநாத்

Asianet News Tamil  
Published : Jun 03, 2017, 04:56 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
"இனிமே  நான் தரையிலேயே உட்கார்ந்துக்கிறேன்" - அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அதிரவைத்த ஆதித்யநாத்

சுருக்கம்

No Special Arrangements For Me Yogi Adityanath Directs Officials In UP

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு மாவட்டங்களில் நான் பயணம் மேற்கொள்ளும் போதும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் எனக்கு சிறப்பு ஏற்பாடுகள், வசதிகள் ஏதும் வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் ஆதித்யநாத்,  ‘நான் தரையில் கூட உட்கார்ந்து கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆதித்யநாத் எங்கு செல்வதாக இருந்தாலும், அங்கு  சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக சர்ச்சை எழுந்ததையடுத்து அதை முடிவக்கு கொண்டு வரும் வகையில் இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரேம்சாகர் என்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கடந்த மாதம்  வீர மரணம் அடைந்தார். இவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற  முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்றார்.

யோகி ஆதித்யநாத் வருகையையொட்டி வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் இல்லத்தில் ஏசி, சோபா இருக்கைகள், தரை விரிப்பு என சகல வசதிகளையும் அதிகாரிகள் செய்தனர்.

ராணுவ வீரர் பிரேம் சாகரின் குடும்பத்தினரை சந்தித்து யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறிவிட்டு சென்ற பின் அடுத்த சில நிமிடங்களில் ஏசி, சோபா இருக்கைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

இந்த விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. வீரர் பிரேம் சாகரின் குடும்பத்தினர் தங்களை இழிவு படுத்தும் வகையில் இந்த செயலை அதிகாரிகள் செய்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

அதேபோல், கடந்த வாரம் உ.பியில் மிகவும் ஏழ்மையில் நிலையில் உள்ள முஷாஹர்இனப்பிரிவினைசேர்ந்த பட்டியலினத்தவர்களை யோகி ஆதித்யநாத்சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதற்காக ஏழைமக்கள் அனைவரையும்சோப்,ஷாம்பு உள்ளிட்டவகளை பயன்படுத்தி சுத்தமாக குளித்த பின்னர்தான் முதல்வரை சந்திக்க வேண்டும் என்று உள்ளூர் அதிகாரிகள் கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது.

இந்த இரு தகவல்களும் அம்மாநிலத்தில் பெருத்த சர்ச்சையை கிளப்பி,பேஸ்புக்,டுவிட்டர்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று திடீரென ஒரு உத்தரவை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

இந்த மாநிலத்தின் மக்களுக்கு அளிக்கும் மரியாதைதான், உண்மையில் முதல்வருக்கு அளிக்கும் மரியாதையாகும். இனிமேல், நான் எந்த இடத்துக்கு பயணம் மேற்கொண்டாலும், ஆய்வுக்கு, நிகழ்ச்சிக்கு சென்றாலும், எனக்காக சிறப்பு ஏற்பாடுகளையும், வசதிகளையும் செய்ய வேண்டாம். நான் தரையில் கூட உட்கார்ந்து கொள்வேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஓவர் ஆக்டிங் போட்ட 30 வயது டீச்சர்.! நைட்டோடு நைட்டா க.காதலனுடன் சேர்ந்து பத்மா செய்த வேலை! காலையில் பூ, பொட்டுடன்!
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?