
சிபிஎஸ்இ 10 வகுப்பு தேர்வு முடிவுகள் www.cbsc.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
சிபிஎஸ்இ நடத்தும் பத்தாம் வகுப்பு தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்றது. இந்த தேர்வை நாடுமுழுவதும்16.67 பேர் எழுதினர்.
சென்னை மண்டலத்தில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 401 பேர் எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. சென்னை, டெல்லி, அலகாபாத், டேராடூன், திருவனந்தபுரம் ஆகிய மண்டலங்களின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற மண்டலங்களின் முடிவு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.results.in , www.cbseresults.nic.in , www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.
மேலும் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இணையதள முகவரியிலும் தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.