"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள்" - தொடங்கியது தேர்தல் ஆணைய சவால்

Asianet News Tamil  
Published : Jun 03, 2017, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
"வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள்" - தொடங்கியது தேர்தல் ஆணைய சவால்

சுருக்கம்

election commission challange on vote machine started

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முடிந்தால் முறைகேடு செய்து காட்டுங்கள் என்ற டெல்லி தேர்தல் ஆணையம் சவால் தொடங்கியது.

சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால், வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்ததால்தான் தேர்தலில் தோல்வியை சந்தித்ததாக ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ்,காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புகார் தெரிவித்தன.

எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. வாக்குபதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது எனவும், இது மிகவும் பாதுகாப்பானது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனிடையே, ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி சட்டப்பேரவையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அக்கட்சியின் எம்எல்ஏவும் பொறியாளருமான சவுரவ் பரத்வாஜ், இவிஎம் மிஷின்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை எம்எல்ஏக்கள் முன்னிலையில், நிரூபித்தார்.

ஆனால், தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி சோதனைக்கு பயன்படுத்திய இயந்திரங்களோடு தேர்தல் ஆணைய இயந்திரங்களை ஒப்பிட முடியாது என தெரிவித்தது.

மேலும், அரசியல் கட்சிகளின் சந்தேகத்தை போக்கும் வகையில் 5 மாநில தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்குபதிவு இயந்திரங்களை கொண்டு பரிசோதனை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, இயந்திரங்களில் முறைகேடு செய்து காட்ட முடியும் என்பதை நிரூபிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சவால் விடுத்து தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.

சோதனையின் போது இயந்திரங்களில் மதர்போர்ட் உட்பட எந்தவித கருவியையும் பிரிக்கவோ அல்லது மாற்றவோ அனுமதிக்கப்படாது எனவும் நிபந்தனைகள் விதித்தது.

ஆணையத்தின் இந்த கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால்,  ஆணையம் ஏறக் மறுத்து விட்டது.

இந்நிலையில் ஜூன் 3ம் தேதி தேர்தல் ஆணையத்தின் சவாலை ஏற்று முறைகேட்டை நிரூபிக்க வேண்டும் கேட்டுகொண்டது. அதன்படி இன்று தேர்தல் ஆணையத்தின் சவால் தொடங்கியுள்ளது.

இதில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட்  ஆகிய கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. 

PREV
click me!

Recommended Stories

ஒரு பைசா கூட குறையாது.. நான் கேரண்டி! 800 கோடி ரூபாய் நஷ்டத்திலும் நம்பிக்கையை காப்பாற்றிய ரத்தன் டாடா!
நியூ இயர் பார்ட்டிக்கு ஸ்விக்கி, ஜொமாடோவை நம்பி இருக்கீங்களா..? மோசம் போயிடாதீங்க..!