சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. இன்று காலை வெளியிடப்படுகிறது….

First Published Jun 3, 2017, 6:31 AM IST
Highlights
to day cbse 10th std result should be published

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள், இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை ரத்து செய்வதாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. அறிவித்தது.

இந்த முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்திருப்பது நியாயமற்ற, பொறுப்பற்ற நடவடிக்கை என்று கூறியதுடன், பழையை முறையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இதன் காரணமாக, சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கருணை மதிப்பெண்கள் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டு, கடந்த மாதம் 28-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி முதல், ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும், 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர்.


மாணவர்கள் எழுதிய இந்த  தேர்வு முடிவுகள், இன்று  காலை வெளியிடப்படும் என்று சி.பி.எஸ்.இ  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

click me!