இனி, ஓட்டல் “ஏ.சி.” அறையில் “ஈஸி”யாக சாப்பிடலாம்.. ஜி.எஸ்.டி. வரி விரைவில் குறைப்பு !!!

First Published Oct 18, 2017, 11:54 AM IST
Highlights
No gst in ac hotels


ஓட்டல்கள்,ரெஸ்டாரண்டகளில் .சி. அறைகளில் சாப்பிடுவோருக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைத்து அடுத்த ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் மிகக்குறைந்தபட்சமாக 5 சதவீத வரியும் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களின் நிதி அமைச்சர்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரியை குறைக்க ஜி.எஸ்.டி. கவுன்சில் தலைவரும், மத்திய நிதிஅமைச்சர் அருண்ஜெட்லியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கடுமையான வரிவிதிப்பு இருப்பதால், ஓட்டல்களுக்கு மக்கள் செல்வது குறைந்துவருகிறது என்று ஓட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் கவலைத் தெரிவித்து இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து,ஜி.எஸ்.டி. வரி குறைப்பு குறைப்பு குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது.

தற்போது, ஓட்டல்களில் .சி. அறையில் சாப்பிடுபவர்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியும், ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “ ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் விதிக்கப்படும் வரியை குறைக்கப்பட உள்ளது. இந்த மாற்றத்தின்படி, ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிவரை விற்றுமுதல் இருந்து காம்போஷிசன் திட்டத்தில் இருக்கும் ஓட்டல்கள், ரெஸ்டாரண்ட்களுக்கு 5 சதவீதம் வரியும், மற்ற ஓட்டல்களுக்கு 12சதவீத வரியும் விதிக்கப்படலாம்

ஆனால், இந்த முடிவு என்பது ஜி.எஸ்.டி. கவுன்சில் அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆனால், 5 நட்சத்திர ஓட்டல்கள் குறித்து ஏதும் தெரியாது. அடுத்த மாதம் அசாம் மாநிலம் , கவுகாத்தி நகரில் நடக்கும் கூட்டத்தில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்என்று தெரிவித்தார்

 

tags
click me!