வெள்ளை மாளிகையில் முதல் முதலாக தீபாவளி கொண்டாடிய அமெரிக்க பிரதமர்…

First Published Oct 18, 2017, 11:52 AM IST
Highlights
Diwali celebrated first in the White House


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் முதல் முதலாக அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.

தீபாவளி பண்டிகையான இன்று தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகையை வெகு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இன்னும் சொல்லப்போனால் இந்திய நாடு முழவதும் தீபாவளியை அசத்தலாக கொண்டாடி வருகின்றனர்.

இதற்காக அதிகாலையிலேயே எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்பு வகைகளை பகிர்ந்துண்டு தீபாவளியை கொண்டாடுகின்றனர். மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். 

அமெரிக்காவின் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டொனால்டு டிரம்ப் தனது முதல் தீபாவளியை இன்று கொண்டாடினார்.

ஆம். அமெரிக்கா வாழ் இந்தியர்களுடன் டிரம்ப், தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.

டிரம்ப் தனது நிர்வாகத்தின் மூத்த இந்திய அமெரிக்க உறுப்பினர்கள், நிக்கி ஹேலி, ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் மற்றும் சீமா வர்மா நிர்வாகி, சென்டர்ஸ் பார் மெடிகேர் மற்றும் மெடிக்கிடிட் சர்வீசஸ் ஆகியோருடன் இணைந்து கொண்டாடினார்.

இந்த விழாவில் அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன் குழுத் தலைவர் அஜித் பாய், முதன்மை துணை பத்திரிகைச் செயலாளர் ராஜ் ஷா ஆகியோரும் பங்கேற்றனர்.

பின்னர், “அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானம், மருந்து, வர்த்தகம் மற்றும் கல்விக்கு இந்திய அமெரிக்கர்களின் அசாதாரண பங்களிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மிகவும் பாரட்டினார்.

நாம் தீபாவளீயை கொண்டாடுவது மூலம் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய மக்களை நாம் நினைவில் கொள்கிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

click me!