
வருமான வரி உச்சவரம்பில் எந்தவித மாற்றமுமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துவிட்டார்.
பாராளுமன்றத்தில் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துவருகிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெறும் தனிநபர் வருமான வரி செலுத்த வேண்டும். இந்நிலையில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 5 லட்சமாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வருவதால், நடுத்தர வாக்காளர்களை கவரும் வகையில், வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டு விட்டது.
இது பெரும்பாலான மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.