
2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.
பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட், GST அமலாக்கத்துக்குப் பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகிய காரணங்களால் இதில் முக்கிய அறிவிப்புகள் பல வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்;
உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
பயிர் கடன் இலக்கு ரூ11 லட்சம் கோடியாக அதிகரிப்பு
ஏழை குடும்பங்களுக்கு மின்வசதி வழங்க ரூ16,000 கோடி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 % முதல் 7.5% ஆக இருக்கும்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்புப் பணம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது
அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை
நாடு முழுவதும் 1.5 லட்சம் புதிய மருத்துவ நல மையங்கள் அமைக்கப்படும்
4 கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்
நிலத்தடி நீர் பாசன திட்டங்களுக்கு ரூ2,600 கோடி
கிராமப்புற வேலைவாய்ப்புக்கு ரூ14.34 லட்சம் கோடி
5 லட்சம் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும்
முதன் முறையாக ரயில்வே பல்கலைக் கழகம் அமைக்கப்படுகிறது
குஜராத்தின் பரோடாவில் சிறப்பு ரயில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்
கல்வித்துறை கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு
10 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும்
அனைவருக்கும் மருத்துவ நல உதவிகளை நீட்டிக்க நடவடிக்கை
விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும்.
மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்
ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நிதி ஆயோக் அதிக கவனம் செலுத்தும்.
விவசாய ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும். விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்தப்படும்.
விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு
மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு
மீன்வள மேம்பாடு, கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10,000 கோடி
* நிர்வாக சீர் திருத்தத்தால் அந்நிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது.
* கூடுதல் மூலதனத்தால் வங்கிகளின் கடன் வழங்கும் திறன் உயர்வு.
*4 வது காலாண்டில் வளர்ச்சி 7.2%-ல் இருந்து 7.4% ஆக இருக்கும்
*2022 ஆண்டுக்குள் விவசாயிகள் வருவாயை 2 மடங்காக உயர்த்த செயல் திட்டம்
* ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும்.
*கிராமங்கள் வேளாண் சந்தைகளை இணைக்கும் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
* மீனவர்கள், கால்நடை வளர்ப்போருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படும்.
* வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கப்படும்.
*கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு நடவடிக்கை
*பயிர் கடனுக்கு ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீடு.
மீன்வள மேம்பாடு கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10000 கோடி ஒதுக்கீடு.
*மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு.
*8 கோடி பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
*கிராமப்புறங்களில் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்
* தேசிய வாழ்வாதாரத் திட்டத்துக்கு ரூ.5750 கோடி ஒதுக்கீடு.
* குறைந்த விலை வீடுகள் கட்டும் திட்டத்துக்கு தனி நிதியம் அமைக்கப்படும் .
*இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.
முத்ரா யோஜனா கீழ் ரூ3 லட்சம் கோடி கடனுதவி
பள்ளிகளில் கரும்பலகைகளுக்கு பதில் டிஜிட்டல் பலகைகள் வைக்க நடவடிக்கை
10 கோடி குடும்பங்களுக்கு ரூ5 லட்சம் வரையிலான சிகிச்சையை அரசு ஏற்கும்
நடுத்தர தொழில்துறை மீதான வரிகள் குறைக்கப்படும், கடனுதவிகள் விரைந்து வழங்கப்படும்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான நிதி உதவித் திட்டங்கள் அதிகரிப்பு.
டி.பியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை. இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு.
வயதான பெண்களுக்காக சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும் .
நாடு முழுவதும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1 மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
ஏகலவ்யா பெயரில் பழங்குடி இன குழந்தைகளுக்கு கல்வித் திட்டம்.
உலகின் மாபெரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
காசநோயாளிகளுக்கு மாதம் ரூ500 வழங்கப்படும்
இலவச மருத்துவ வசதி திட்டத்துக்கு ரூ1,200 கோடி
உரம், விவசாயத்துறை, விவசாய கருவிகள் தயாரிப்பு நிறுவன பங்குகள் விலை உயர்வு
டெல்லி மற்றும் சுற்றுப் பகுதிகளில் புகை மூட்டத்தை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம் விளை பொருட்களுக்கான ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது
புதிய ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில் 12 சதவீதத்தை (பி.எப்) அரசே வழங்கும்
பெண் ஊழியர்களின் பி.எப் பிடித்தம் 8%ல் இருந்து 3% ஆக குறைப்பு
ஜவுளி துறைக்கு ரூ7,148 கோடி ஒதுக்கீடு
ஹவாய் செருப்பு போட்ட எளியவரும் ஹவாய் ஜஹாசில் (விமானத்தில்) பயணிக்க வைப்போம்
4000 கி.மீ. நீளத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்
பெங்களூருவில் ரூ.17,000 கோடியில் புறநகர் ரயில் சேவை
18,000 கி.மீ. நீளத்துக்கு புதிய இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும்
99 புதிய நகரங்களும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்கப்படும்
சுங்கச் சாவடிகளில் மின்னணு பரிமாற்ற முறையை அமல்படுத்த திட்டம்
1 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி
கிராமங்களில் 5 லட்சம் வைஃபை வசதிகள்
டிஜிட்டல் இந்தியா திட்டத்துக்கு ரூ3,073 கோடி ஒதுக்கீடு
5 லட்சம் ஊரகப் பகுதிகளில் ''வை-ஃபை'' ஹாட் ஸ்பாட் வசதி ஏற்படுத்தப்படும்
பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கப்படும்
அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி
ஹவாய் செருப்பு போட்ட எளியவரும் ஹவாய் ஜஹாசில் (விமானத்தில்) பயணிக்க வைப்போம்