விவசாயத்தை மேம்படுத்த “ஆபரேஷன் கிரீன்” திட்டம்!! விவசாய கடன் 11,000 கோடி - விவசாயத்திற்கான அறிவிப்புகள்

 
Published : Feb 01, 2018, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
விவசாயத்தை மேம்படுத்த “ஆபரேஷன் கிரீன்” திட்டம்!! விவசாய கடன் 11,000 கோடி - விவசாயத்திற்கான அறிவிப்புகள்

சுருக்கம்

budget allocation for agriculture

விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் “ஆபரேஷன் கிரீன்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துவருகிறார்.

விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறைக்கான அறிவிப்புகள்:

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. விவசாயத்தில் லாபகரமான வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும் அரசு உறுதியாக உள்ளது. விவசாய உற்பத்தியை பெருக்கி, குறைந்த முதலீட்டில் விவசாயிகள் அதிக வருமானம் பெறும் நிலையை உருவாக்க வேண்டும். 

இந்த பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் ஊரக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாய கடன் இலக்கு 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மீன்வளம், கால்நடைத்துறைகள் உள்கட்டமைப்புகளுக்கு 11,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். விவசாய விளைப்பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  உணவு பதப்படுத்தும் துறைக்கு 1,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 

வேளாண் விளை பொருட்கள் ஏற்றுமதி முறை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உஜ்வாலா யோஜனா திட்டத்தின்படி, மேலும் 8 கோடி வீடுகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும்.

அரசு முக்கியத்துவம் கொடுத்துவரும் திட்டங்களில் சௌபாக்யா யோஜனாவும் ஒன்று. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 6 கோடி வீடுகளுக்கு கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டு விட்டன. அடுத்த ஆண்டில் மேலும் 2 கோடி வீடுகளுக்கு கழிவறைகள் கட்டப்படும் என அருண் ஜேட்லி தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்