உச்சத்தில் பெட்ரோல் விலை !  மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு!!

 
Published : Feb 01, 2018, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
உச்சத்தில் பெட்ரோல் விலை !  மீண்டும் வரலாறு காணாத விலை உயர்வு!!

சுருக்கம்

petrol.diesel price hike today

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில் அதன் விலை தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது. பெட்ரோல் நேற்றைய விலையை விட 14 காசுகள் அதிகம் உயர்ந்து உச்சபட்டசமாக லிட்டர் ஒன்றுக்கு 75 ரூபாய் 77 காசுகளுக்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம்  இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் கைவிடப்பட்டது.



இதையடுத்து  கச்சா எண்ணெயின்  ஒவ்வொரு நாள் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக உயர்ந்துவரும் நிலையில், இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று ஒரு நொள்  மட்டும் பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆனால் இன்று பெட்ரோலின் விலை 14 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ. 75.77 ஆகவும், டீசலின் விலையில் 12 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ. 67.62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலின் இந்த வரலாறு காணாத விலை உயர்வுக்கு கொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்