இது சாதாரணமானதுதான் ஆனால் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அபூர்வம்!

 
Published : Jan 31, 2018, 06:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
இது சாதாரணமானதுதான் ஆனால் 150 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அபூர்வம்!

சுருக்கம்

America witnesses once-in-150 years super blood moon eclipse RIGHT NOW

முழு சந்திர கிரகணம் சற்று முன் நிகழ்ந்துள்ளது, நிலவு சூப்பர் நிலாவாக பெரிதாக தெரியும். அதோடு ப்ளூ மூன், பிளட் மூன், ரெட் மூன் ஆகியவையும் அடுத்தடுத்து நிகழவுள்ளது. 

சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

இந்த முழு சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இது, இம்மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.

நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்கியது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும் என சொல்லப்படுகிறது. அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலைக்கு திரும்பும்.

இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், சிவந்த நிலாவாக தோன்றும். இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.

மூன்றாவது அரிய நிகழ்வு, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.



கிரகணம் உருவாகும் இரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்றும், இருந்தாலும், பயப்படும் அளவுக்கு  எந்த சம்பவமும் நிகழாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்ணாலேயே இதை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமும் காணலாம். முழு சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படும் நம்பிக்கைக்கு அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இது கோல்களில் நிகழும் மாற்றம் தான், ஆனால் 150 வருடத்திற்கு ஒரு முறை நிகழ்வதால் இதி பெரிதாக பார்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்