"இனி ரொக்கமாக சம்பளம் வாங்க முடியாதாம்..!!!" - வருகிறது புதிய மசோதா

 
Published : Feb 04, 2017, 05:24 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
"இனி ரொக்கமாக சம்பளம் வாங்க முடியாதாம்..!!!" - வருகிறது புதிய மசோதா

சுருக்கம்

தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாகக் கொடுக்காமல், காசோலை மூலம் அல்லது வங்கியில் இருந்து மின்னணு பரிமாற்றம் மூலம் செய்ய வேண்டும் என்பதற்கான மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது.

புதிய மசோதா

மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, ‘ஊதியம் அளித்தல் திருத்த மசோதா 2017’ என்ற பெயரில் இந்த மசோதாவை மக்கள் அவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார். இந்த மசோதாவின்படி, தொழிலாளர்களுக்கு அவரின் சம்மதத்தின் அடிப்படையில், ஊதியத்தை காசோலை அல்லது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்துதல் என்பதாகும்.

டிசம்பரில் தாக்கல்

ஊதியம் செலுத்துதல் 2016 என்ற மசோதாவுக்கு மாற்றாக இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர் அமளி, முடக்கம் காரணமாக நிறைவேறவில்லை. இதையடுத்து, டிசம்பர் 28-ந் தேதி ஊதியம் செலுத்துதல் மசோதா தொடர்பாக அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த அவசரச்சட்டத்தை சட்டமாக்கும் வகையில் இப்போது மசோதா மக்கள் அவையில், வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

காசோலைதான்...

இந்த மசோதாவின்படி, தொழிற்சாலைகள், நிறுவனங்களில் உள்ளிட்ட அனைத்திலும் பணியாற்றும் தொழிலாளர்களின் ஒப்புதலின் பெயரில் மாத ஊதியத்தை காசோலை அல்லது அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். இந்த சட்டத்திருத்தம் மாநில அரசுகளுக்கும் பொருந்தும். டிஜிட்டல் மற்றும் குறைந்த பணப் பொருளாதாரம் ஆகியவற்றை செயல்படுத்த இந்த திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.

தடையில்லை

அதேசமயம், சிறு, குறுநிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியத்தை விருப்பத்தின் அடிப்படையில், ரொக்கப்பணமாக வழங்கவும் தடையில்லை.

இப்போதுள்ள நிலையில், மாதம் ஒன்றுக்கு ரூ. 18 ஆயிரத்துக்கு மிகாமல் ஊதியம் பெறுவோர் தவிர்த்து அனைவருக்கும் பொருந்தும். மத்திய அரசின் ரெயில்வே, விமானப்போக்குவரத்து, சுரங்கங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், உள்ளிட்ட மத்தியஅரசு நிறுவனங்களிலும் இந்த முறை நடைமுறைக்கு வரும். மாநிலங்களில் கேரளா, ஆந்திரா, உத்தரகாண்ட், பஞ்சாப், மற்றும் ஹரியானா ஆகியவை தொழிலாளர்களுக்கு ஊதியத்தை காசோலை அல்லது மின்னணு முறையில் அளிக்க தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

சீனாவில் இந்திய யூடியூபர் கைது! அருணாச்சல் பற்றி பேசியதால் 15 மணிநேரம் பட்டினி போட்டு விசாரித்த அதிகாரிகள்!
'பாரத் டாக்ஸி' மொத்த லாபமும் ஓட்டுநர்களுக்கே பகிர்ந்தளிக்கப்படும் அமித் ஷா திட்டவட்டம்