'2 குழந்தைகளுக்கு மேல் வைத்திருந்தால் பள்ளியில் அட்மிஷன் கிடையாது'

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
'2 குழந்தைகளுக்கு மேல் வைத்திருந்தால் பள்ளியில் அட்மிஷன் கிடையாது'

சுருக்கம்

மேற்கு டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் சல்வான் என்ற பெயரில் ஒரு மழலையர் பள்ளியும், தொடக்க பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது

இந்நிலையில், மேற்படி விண்ணப்ப படிவங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல்வேறு நிபந்தனைகளுடன் இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற  நிபந்தனையை பள்ளி நிர்வாகம் அதில் தெரிவித்துள்ளது. 

இந்த நிபந்தனை தொடர்பாக, விளக்கம் அளித்துள்ள இப்பள்ளியின் நிர்வாகி சுஷில் சவான், நாட்டில் மக்கள்தொகை பெருகிக் கொண்டே வருவதை கருத்தில் கொண்டும், குறைந்த அளவில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தங்கள் பிள்ளைக்கு இந்தப் பள்ளியில் சீட் கிடைத்த பிறகு நான் கைந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதியரை இவர் எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறார்? என்பது பள்ளி தான் தெரிவிக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் பள்ளி நிர்வாகம் போல் மற்ற அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்பட சிறந்த பிரச்சாரங்கள்  செய்ய வேண்டும்.ஒவ்வொரு தம்பதியும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொளவதை ஊக்குவிக்க வேண்டும், இரண்டுக்கு மேற்பட்ட குழந்தை இருப்பவர்களுக்கு அரசு சலுகைகள் மறுப்பு, 

தேர்தலில் போட்டியிடத் தடை ,அரசுப் பணியில் சேரத் தடை போன்ற எச்சரிக்கை செய்தால் நாட்டில் மக்கள் தொகையை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Big Relief for Cancer Patients: புற்றுநோய் மருந்துகள் விலை குறையுமா? 137 மருந்துகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
Kolkata Stampede: பெண்கள், குழந்தை உட்பட 19 உசுரு போச்சு..! கொல்கத்தா விபத்துக்கு இது தான் காரணம்..?