பெற்ற மகளை 6 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த தந்தை - உதவிய தாயும் கைது

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 02:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
பெற்ற மகளை 6 ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்த தந்தை - உதவிய தாயும் கைது

சுருக்கம்

புனேவில் ஒருவர் தான் பெற்ற மகளையே கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் 12 வயதான அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தந்தையை செய்தனர்.

புனே காலேவாடி பகுதியை சேர்ந்த அந்த கொடூர தந்தை தனது 12 வயது மகளை கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அந்த சிறுமி வயதுக்கு வந்துள்ளார்.

சிறுமி வயதுக்கு வந்த பின்னரும் தொடர்ந்து அந்த கொடூர தந்தை சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த பின்னரும் அவர் மௌனமாகவே இருந்துள்ளார்.

இதனால் மனம் வெறுத்துப்போன அந்த சிறுமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதைப்போல் அமெரிக்காவின் ஹவுஸ்டன் நகரில் தனியார் பள்ளி ஒன்றில் அலெக்ஸாண்ட்ரியா வெரா என்ற 24 வயதான பெண் ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு தனது வகுப்பில் உள்ள 13 வயது மாணவன் ஒருவனுடன் அந்த ஆசிரியரும், பலமுறை உடலுறவு கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதன் காரணமாக அந்த ஆசிரியர் கர்ப்பமடைந்துளார். இதனால் ஆசிரியரும், மாணவனும் உடலுறவு கொண்டது வெளியே தெரியவந்தது.

சிறுவனை தவறான வழியில் வழிநடத்திய குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட ஆசிரியருக்கு நீதிபதி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பங்களாதேஷில் மீண்டும் ஒரு இந்து சுட்டுக்கொலை! 3 வாரத்தில் 5-வது பலி!
வாயில்லா ஜீவனை இப்படியா பண்றது? நாயை மது குடிக்க வைத்து வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!