ஆதார்  கேட்டு அடம் பிடித்த அரசு மருத்துவமனை !  வார்டு வாசலில் கர்ப்பிணிப் பெண் குழந்தை  பெற்ற அவலம் !!

First Published Feb 10, 2018, 10:28 AM IST
Highlights
No aadar.. No admission in hospital in hariyana


அரியானா மாநிலத்தில் ஆதார் இல்லாததால் கர்ப்பிணிப் பெண்ணை அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துமனை நிர்வாகம்  சேர்க்க மறுத்ததால், அந்த வார்டு வாசலிலேயே அந்தப் பெண் ஆழகான குழந்தையைஙப பெற்றெடுத்தார்.

அரியானா மாநிலம் குர்கானில் உள்ள அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு இல்லாத காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது.

இந்த  கொடுரைமயான சம்பவம் பற்றி  அந்த கர்ப்பிணி பெண்ணின் கணவர்  செய்தியாளர்களிடம் பேசும்போது,   என் மனைவி முன்னி கேவத்தை குர்கான்  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன்.

அங்கு பொது நலப்பிரிவிற்கு செல்லும் முன் செவிலியர்கள் என் மனைவியின் ஆதார் கார்டின் நகலை தங்களிடம் தருமாறு கூறினர். அதுவரை நாங்கள்  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினர். ஆனால்  வலியால் தவித்த என் மனைவிக்கு  வார்டுக்கு வெளியிலேயே  குழந்தை பிறந்தது என கூறினார்.

ஆதார் கார்டு இல்லாததால் கர்ப்பிணி பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து,  குர்கான் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் பி கே ரஜோரா, இந்த  சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவரையும், செவிலியரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

click me!