மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடும் என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரும் பாஜக கூட்டணிக்குத் திரும்ப வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
இந்திய கூட்டணியில் முக்கிய தலைவரான பீகார் முதல்வர் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேரக்கூடும் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு நாட்களாக, மம்தா பானர்ஜி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இரண்டு முக்கிய தலைவர்கள் காங்கிரஸுடனான கூட்டணியை நிராகரித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸும் பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடும் என்று கூறிவிட்டனர்.
undefined
இந்நிலையில் நிதிஷ் குமார் தனது எம்எல்ஏக்கள் அனைவரையும் பாட்னாவுக்கு அழைத்துள்ளார். அவர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜக, ஜிதன் ராம் மஞ்சி மற்றும் பிறரின் உதவியுடன் மீண்டும் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இந்திய செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையம் நிறுவப்படும்: அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்
243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டசபையில் பெரும்பான்மை எண்ணிக்கை 122. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 45 இடங்களைப் பெற்றுள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அக்கட்சியின் 82 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால், 79 இடங்களைக் கொண்டுள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கழற்றிவிடப்படும்.
நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்குத் திரும்புவது குறித்து மாநில பாஜக தலைவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்து, மாநில பாஜக தலைவர்கள் நிதிஷ் குமாரை மோசமாக விமர்சிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக உத்தரவிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மாநில பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி மற்றும் பீகார் பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி இருவரும் இன்று மாலை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க உள்ளனர்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தால், இது நிதிஷ் குமாரின் ஐந்தாவது கூட்டணி மாற்றமாக இருக்கும். 2013 முதல், அவர் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகாகத்பந்தன் இடையே ஊசலாடியபடியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜொமேட்டோ ஆன்லைன் பேமெண்ட் அக்ரிகேட்டராக செயல்பட ஆர்பிஐ அனுமதி!