கார்களில் ஆறு சீட் பெல்ட் கட்டாயம்; எப்போது அமலுக்கு வருகிறது நிதின் கட்கரி அறிவிப்பு!!

Published : Sep 29, 2022, 03:56 PM ISTUpdated : Sep 29, 2022, 04:39 PM IST
கார்களில் ஆறு சீட் பெல்ட் கட்டாயம்; எப்போது அமலுக்கு வருகிறது நிதின் கட்கரி அறிவிப்பு!!

சுருக்கம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ச்சியான ட்வீட்களில், மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. இதையடுத்துதான், எந்த மாதிரியான கார், அதன் ரகம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடர்ச்சியான ட்வீட்களில், மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பே முதன்மையானது. இதையடுத்துதான், எந்த மாதிரியான கார், அதன் ரகம் என்ன என்பதை பார்க்க வேண்டும்.

வாகனத் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோக தடைகள் மற்றும் சிறு பொருளாதார சூழ்நிலையால்,  அதன் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (எம்-1 வகை) குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்கும் திட்டத்தை அக்டோபர் 01, 2023 முதல் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

முன்னதாக மோட்டார் வாகனத்தில் பயணிப்பவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், 1989 ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதிகளில் (CMVR)திருத்தம் செய்து பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2022 ஆம் ஆண்டில், ஜனவரி 14 ஆம் தேதி வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1 அக்டோபர் 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்படும் M1 வகை வாகனங்களில், இரண்டு பக்க, உடற்பகுதி காற்றுப் பைகள் பொருத்தப்பட வேண்டும். முன் வரிசை இருக்கைகளை ஆக்கிரமிப்பவர்களுக்கு தலா ஒன்று, மற்றும் இரண்டு பக்க திரை/குழாய் காற்றுப் பைகள், தலா ஒன்று வெளிப்புற இருக்கைகளை ஆக்ரமிப்பவர்களுக்கு பொருத்தப்பட வேண்டும். 

மேலும், M1 வகை வாகனங்களில் எட்டு இருக்கைகளுக்கு மேல் இல்லாத வாகனங்கள் உள்ளன. ஏர்பேக் என்பது வாகன ஓட்டியின் கட்டுப்பாட்டு அமைப்பாகும். இது விபத்தின்போது ஓட்டுநர் மற்றும் வாகனத்தின் டேஷ்போர்டுக்கு இடையில் பாதுகாப்பை ஏற்படுத்தும். இதனால் விபத்தின்போது கடுமையான காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். 

மின்சார ரயிலில் கர்பா நடனமாடி மகிழ்ந்த பெண்கள்.. 1 லட்சம் பார்வையாளர்களை கடந்த வைரல் வீடியோ

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 4 கோடி பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை... பிரதமர் மோடி பெருமிதம்!!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சைரஸ் மிஸ்திரி செப்டம்பர் 4 ஆம் தேதி  மும்பைக்கு செல்லும் வழியில் கார் விபத்தில் உயிரிழந்தார். பின் இருக்கையில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி மற்றும் ஜஹாங்கீர் சீட்பெல்ட் அணியவில்லை. இதையடுத்து, சாலை பாதுகாப்பு விதிகள் மட்டுமின்றி வாகன பயணத்தின்போது சீட்பெல்ட் அணிவது முக்கியம் என்பதை உணர வைத்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!