Delhi-Mumbai expressway: ரூ. 98,000 கோடி செலவில் டெல்லி மும்பை விரைவுச்சாலை; சிறப்புக்கள் என்னென்ன?

By Dhanalakshmi GFirst Published Oct 19, 2022, 12:52 PM IST
Highlights

டெல்லி மும்பை மும்பை விரைவுச்சாலையின் முதல் கட்டப்பணிகள் டெல்லியில் இருந்து ஜேஎன்பிடி வரை நடப்பாண்டில் நிறைவடையும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மும்பையில் இருக்கும் நரிமன் பாயின்ட்டில் இருந்து டெல்லிக்கு 12 மணி நேரத்தில் செல்ல வேண்டும் என்பதே தன்னுடைய திட்டம் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் சாதனைகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

"நாட்டில் சுமார் ஒரு கோடி பேர் சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன். இன்று அவர்களில் 80 லட்சம் பேர் இ-ரிக்‌ஷா ஓட்டுகின்றனர். நாட்டில் 400 ஸ்டார்ட் அப்கள் நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், இ-ரிக்‌ஷா போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார். ஆர்டி மற்றும் எஸ்ஹெச் தேசிய கல்லூரியில் ஆர்கானிக் தோட்டத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்து இருந்தார். 

சுமார் 98,000 கோடி ( 98 ஆயிரம் கோடி) செலவில், 1380 கிமீ நீளத்திற்கு அமைக்கப்படும் டெல்லி மும்பை மும்பை விரைவுச்சாலை இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இந்த நெடுஞ்சாலை டெல்லி மற்றும்  மும்பை இடையே இணைப்பை மேம்படுத்தும். இந்த விரைவுச்சாலையானது டெல்லி-பரிதாபாத்-சோனா பகுதி வழியாக டெல்லியின் நகர்ப்புற மையங்களை இணைக்கும். மேலும் ஜேவார் விமான நிலையம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகத்தை மும்பையில் இருந்து இணைக்கும்.

Defexpo 2022 Gandhinagar:காந்திநகரில் பாதுகாப்புத்துறை கண்காட்சி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

மேலும், டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக இந்த மும்பை விரைவுச்சாலை செல்லும். இத்துடன், பொருளாதார நகரங்களான ஜெய்ப்பூர், கிஷன்கர், அஜ்மீர், கோட்டா, சித்தோர்கர், உதய்பூர், போபால், உஜ்ஜைன், இந்தூர், அகமதாபாத், வதோதரா சூரத் ஆகிய நகரங்களை இணைத்து, இந்த நகரங்களில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு பொருளாதார வளத்தை கொடுக்கும் என்று நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.


பிரதமரின் 'புதிய இந்தியா' திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்ட டெல்லி மும்பை மும்பை விரைவுச்சாலை 2018 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டது. 1,380 கி.மீட்டர்களில், 1,200 கி.மீ.க்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. 

Mallikarjun Kharge :காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே : யார் இவர்? பின்னணி என்ன?

click me!