மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக(MGNREGA scheme) கடந்த 8 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக(MGNREGA scheme) கடந்த 8 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தெலங்கானாவில் உள்ள கம்மாரெட்டி நகரில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.5லட்சம் கோடி செலவிட்டுள்ளது. இதில் 2020-21 ஆண்டு கொரோனா காலத்தில் மட்டும் இந்தத் தொகையில் 20 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்துக்கு மட்டும் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்காக ரூ.20ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள சர்வே குழுக்கள் எந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் செல்லும். 100நாட்கள் திட்டத்துக்கான பணத்தை முறையாக செலவிடாமல் இருந்தால், அதுகுறித்த குறிப்பு மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைக் குழுவிடம் அளித்துவிடுவார்கள்.
பிரமாண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு... நேரலை நிகழ்வு
100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கான நிதிஒதுக்கீட்டை குறைக்வே சர்வே குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது தவறானது. இதற்காக ஒதுக்கப்பட்ட பணம் முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யத்தான் அனுப்பி வைக்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் ஏராளமான ஓட்டைகள் இருந்தன. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் பயனாளிகளின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக பணம்வங்கி மூலம் பரிமாற்றம் செய்யப்படுகிறது.
தெலங்கானாவில் அரசுக்கு கடன் அதிகரித்து வருகிறது, விவசாயிகள் மனஅழுத்தத்தில் உள்ளனர். வருவாய் உபரியை அனுபவித்து வந்த தெலங்கனா தற்போது வருவாய் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது
பட்ஜெட்டில் குறிப்பிடாமலேயே, சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமலேயே முதல்வர் சந்திரசேகர் ராவ் அரசு கடன் பெற்றுள்ளது. விவசாயிகள் கடன் மாநிலத்தில் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. விவசாயிகள் தற்கொலையில் தெலங்கானா 4வது இடத்தில் உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் பெயரை மாற்றி, அதை மாநில அசு திட்டமாக தெலங்கானா அரசு மாற்றுகிறது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்