ins vikrant: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Published : Sep 02, 2022, 11:16 AM IST
ins vikrant: ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

சுருக்கம்

கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 2-வது விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.

கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் 2-வது விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தை பிரதமர் மோடி நாட்டுக்கு இன்று அர்ப்பணித்தார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர் மற்றும் விமானம்தாங்கிக் கப்பல் முற்றிலும் உள்நாட்டிலேயே கட்டப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக கடும் உழைப்புக்குப்பின் ரூ.20ஆயிரம் கோடி மதிப்பில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் கட்டப்பட்டுள்ளது.

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலின் எடை 45 ஆயிரம் டன்னாகும். இந்த கப்பலின் நீளம் 860 அடி(262மீ்ட்டர்), 197அடி உயரம்(60மீட்டர்). இந்தியா சொந்த தொழில்நுட்பத்தில் கட்டிய முதல் விமானம் தாங்கிக் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். இந்த கப்பலில் 30 போர்விமானங்கள், ஹெலிகாப்டர்களை நிறுத்த முடியும்.
2017ம் ஆண்டே இந்திய கடற்படையில் விக்ராந்த் சேர்க்க திட்டமிடப்பட்டது ஆனால், 2வது பகுதி கட்டுமானம் தாமதமானதால் சேர்க்க முடியவில்லை.

ins vikrant: இந்திய பாதுகாப்பு துறையை தன்னிறைவாக மாற்றும் உந்துதல் விக்ராந்த்: பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த 1961ம் ஆண்டு பிரிட்டனிடம் இருந்து இந்தியா முதன்முதலாக விமானம் தாங்கிக் கப்பலை வாங்கியது அதற்கு விக்ராந்த் என்று பெயரிட்டது. ஆனால், அந்தக் கப்பல் கடந்த 1997ம் ஆண்டு ஓய்வு அளிக்கப்பட்டது. புதுதாக உருவாக்கப்பட்ட இந்த கப்பலுக்கும் விக்ராந்த் என்று பெயரிடப்பட்டுள்ளது. 
இந்த விக்ராந்த் கப்பலில் உணவு சப்ளை செய்யும் இடம் மட்டும் 3 அரங்குகள் உள்ளன. ஒரே நேரத்தில் 600 பேர் சாப்பிடும் அளவுக்குகூட உணவுக்கூடங்கள் உள்ளன.

காணாமல் போன மாற்றுத்திறனாளி.. 6 ஆண்டுகளுக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைத்த ஆதார்.. எப்படி தெரியுமா?

விக்ராந்த் கப்பலில் 16 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, ஒரு ஐசியு, இரு அறுவை சிகிச்சை மையங்கள் உள்ளன.

இது தவிர சிடி ஸ்கேன் மையம், எக்ஸ்ரே மையம், பிசியோதெரபி மருத்துவமனை, ரத்தப்பரிசோதனை ஆய்வகம், பல்மருத்துவமனை, டெலிமெடிசன் வசதி, கொரோனா வந்தால் தனிமைப்படுத்த தனி அறைகள் உள்ளன. 

விக்ராந்த் கப்பலின் பின்புறத்தில் ரஷ்யாவின் மிக்29கே, கமோவ்-31, ஹெலிகாப்டர் ஆகியவை பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.

muruga mutt:கர்நாடக முருக மடம் மடாதிபதி போக்ஸோ சட்டத்தில் கைது: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் நடவடிக்கை

விக்ராந்த் கப்பலின் டெக்அளவு 12,500 சதுரகி.மீ. இரு பெரிய ஹாக்கி மைதானம் போல் இருக்கும். 12 போர் விமானங்கள், 6 ஹெலிகாப்டர்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்க முடியும்.இந்திய கடற்படையில் விக்ராந்த் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்தியாவிடம் விக்ரமாதித்யா, விக்ராந்த்  ஆகிய இரு விமானம் தாங்கி கப்பல்கள் உள்ளன

ஐஎன்எஸ் விக்ராந்த் அதிகபட்சமாக 28 நாட்டிகல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இங்கு பணியாற்றுவோருக்காக 2200 அறைகள் கட்டப்பட்டுள்ளன. பெண் ஊழியர்கள், ஆண் ஊழியர்களுக்காக தனித்தனியாக கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

விக்ராந்த் கப்பல் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. கப்பலுக்கு பயன்படும், ஐஏசி-1 ஸ்டீல் தகடுகள் செயில் நிறுவனமும், பாதுகாப்பு துறையின் டிஆர்டிஏ ஆய்வகமும் இணைந்து உருவாக்கியது. 
விக்ராந்த் கப்பலில் 2,500 கி.மீ தொலைவுக்கான கேபில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது கொச்சி முதல் டெல்லிவரை நீளம் கொண்ட கேபில்கள். 

 கப்பலில் 2000 வால்வுகள், 23ஆயிரம்டன் ஸ்டீல், 150கி.மீ நீளத்துக்கான பைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கப்பலைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட 76% பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. 

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதற்காக கொச்சி கப்பல் கட்டும்துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று விக்ராந்த் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். முன்னதாக கப்பற்படைக்கான சிறப்பு கொடியையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.  

niira radia:ratan tata :8 ஆண்டுகளுக்குபின்.!நீரா ராடியா-ரத்தன் டாடா டேப் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கப்பல்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமதுகான், எர்ணாகுளம் எம்.பி. எபி ஈடன், கப்பற்படை தலைமை அட்மிரல் ஹரிகுமார், கொச்சிகப்பல் கட்டும் தளம்  அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு