ins vikrant: இந்திய பாதுகாப்பு துறையை தன்னிறைவாக மாற்றும் உந்துதல் விக்ராந்த்: பிரதமர் மோடி பெருமிதம்

By Pothy RajFirst Published Sep 2, 2022, 10:44 AM IST
Highlights

இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசாங்கத்துக்கு உந்து சக்தியா விளங்குவது, எடுத்துக்காட்டாக இருப்பது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

இந்தியப் பாதுகாப்பு துறையை தன்னிறைவு கொண்டாதாக மாற்ற அரசாங்கத்துக்கு உந்து சக்தியா விளங்குவது, எடுத்துக்காட்டாக இருப்பது ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரூ.200 கோடி மதிப்பில் உருவான விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை பிரதமர் மோடிஇன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். அதற்கு முன்பாக இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார்.

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் ஆரிப் முகமது கான் ,அமைச்சர்கல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கொச்சி கப்பல் கட்டும் துறைமுகத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு, இந்திய கடற்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைபிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். 

இந்திய கடற்படைக்கு புதிய கொடியை பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்து பேசியதாவது :  
இன்று, கேரள கடற்கரையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்தியரும் சூரிய உதயத்தை புதிய எதிர்காலத்தோடு பார்க்கிறார்கள். ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை அர்ப்பணிக்கும் இந்த நிகழ்வு, உலகச் சமூக்தினரிடையே இந்தியாவின் எழுச்சியையும், உணர்வையும் வெளிப்படுத்தும். 

பிரமாண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு... நேரலை நிகழ்வு

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் அல்ல, மிகப்பெரிய ராட்சத உருவம் கொண்டது. தனித்துவமானது, சிறப்பானது. போர்க்கப்பல் அல்ல, கடின உழைப்பு, புத்தாலித்தனம், தாக்கம், 21ம் நூற்றாண்டுக்கு இந்தியாவுக்கான கடமை  ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

இலக்குகள் விரைவானது, பயணங்கள் நீண்டது, கடல் மற்றும் சவால்கள் முடிவற்றவை இதற்கு இந்தியாவின் பதில் விக்ராந்த். இந்தியா தன்னிறைவு பெற்றதற்கான தனித்துவமான அடையாளம் ஐஎன்எஸ் விக்ராந்த். சுதந்திரபெற்றதற்கு பின் ஒப்பற்ற படைப்பு விக்ராந்த். உள்நாட்டு தொழில்நுட்பத்தை மட்டும் பயன்படுத்தி மிகப்பெரிய விமானம் தாங்கிக் கப்பல்களை வடிவமைத்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இன்று சேர்ந்துள்ளது. இந்தியாவின் புதிய நம்பிக்கையை நிரப்பியுள்ளது, நாட்டுக்கு புதிய நம்பிக்கை ஒளியை அளித்துள்ளது. 

விகாராந்த் கப்பலின் ஒவ்வொரு பாகமும் சிறப்பானது, வலிமையானது, உள்நாட்டு தயாரிப்பில் உருவானது. உள்நாட்டு படைப்பின் அடையாளம், உள்நாட்டு வளங்கள், திறமைகள், திறன்களின் கூட்டு. கப்பலில் பயன்படுத்தப்பட்ட உருக்குப் பொருட்கள்  உள்நாட்டைச் சேர்ந்தவை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..!

சத்ரபதி சிவாஜி மகராஜா, தன்னுடைய படைத்திறனைப்பயன்படுத்தி கப்பற்படையை உருவாக்கி எதிரிகளை தூக்கிமின்றி செய்தார். ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, இந்திய கப்பல்கள் வலிமையைப் பயன்படுத்தி, மிரட்டி வர்த்தகம் செய்தனர்.  

இந்தியாவின் கடல்சார் வலிமையை உடைக்க, சிதைக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். ஆங்கிலேயர்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றியதன் மூலம் எவ்வாறு இந்திய கப்பல்களுக்கும், வணிகர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பது தெரியவரும்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்

click me!