காணாமல் போன மாற்றுத்திறனாளி.. 6 ஆண்டுகளுக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைத்த ஆதார்.. எப்படி தெரியுமா?

Published : Sep 02, 2022, 10:19 AM ISTUpdated : Sep 02, 2022, 10:21 AM IST
காணாமல் போன மாற்றுத்திறனாளி.. 6 ஆண்டுகளுக்குப் பின்னர் குடும்பத்துடன் இணைத்த ஆதார்.. எப்படி தெரியுமா?

சுருக்கம்

பீகாரின் ககரியா மாவட்டத்தில் நவம்பர் 2016 முதல் காணாமல் போனதாக தேடி வந்த மாற்றுத் திறனாளி (காது கேளாதவர் மற்றும் வாய் பேசாதவர்) ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆதார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டார். ஆதார் டிஜிட்டல் முதுகெலும்பாக மட்டுமின்றி, காணாமல் போனவர்களை எளிதில் கண்டறிவதற்கு உதவுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியமாக அமைந்துள்ளது. 

பிரிந்த குடும்ப உறுப்பினர் ஒருவரை இணைப்பதில் ஆதார் மீண்டும் முக்கியப் பங்காற்றியுள்ளது. தற்போது 21 வயதுடைய மாற்றுத் திறனாளி இளைஞரை ஆறு வருடங்களுக்குப் பின்னர் அவரது குடும்பத்துடன் ஆதார் இணைத்துள்ளது. 

பீகாரின் ககரியா மாவட்டத்தில் நவம்பர் 2016 முதல் காணாமல் போனதாக தேடி வந்த மாற்றுத் திறனாளி (காது கேளாதவர் மற்றும் வாய் பேசாதவர்) ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆதார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டார். ஆதார் டிஜிட்டல் முதுகெலும்பாக மட்டுமின்றி, காணாமல் போனவர்களை எளிதில் கண்டறிவதற்கு உதவுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சாட்சியமாக அமைந்துள்ளது. 

இதையும் படிங்க;- ncrb: இந்தியாவில் நாள்தோறும் 84 கொலை, 11பேர் கடத்தல்: உ.பி. முதலிடம் என்சிஆர்பி தகவல்

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு, நவம்பர் , 28ஆம் தேதி, 15 வயது சிறுவன் கண்டறியப்பட்டான். அந்த சிறுவனுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுகள் இருந்ததால், உரிய நடவடிக்கைக்குப் பிறகு ரயில்வே அதிகாரிகள் அவரை நாக்பூரில் உள்ள அரசு மூத்த சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு பிரேம் ரமேஷ் இங்கலே என்று பெயரிடப்பட்டது. 

அனாதை இல்லத்தின் கண்காணிப்பாளரும் ஆலோசகருமான வினோத் தபேராவ், 2022, ஜூலை மாதம் நாக்பூரில் உள்ள ஆதார் சேவா கேந்திராவிற்கு பிரேம் ரமேஷ் இங்கேலின் ஆதார் பதிவுக்காகச் சென்றனர். ஆனால் இந்த ஆதார், மற்றொரு ஆதார் எண்ணுடன் பயோமெட்ரிக்ஸ் மூலம் பொருந்தியது. இதனால், இந்த பதிவுக்கு எதிராக புதிய ஆதார் கார்டு உருவாக்க முடியவில்லை.

இதையடுத்து, மும்பையில் இருக்கும் UIDAI பிராந்திய அலுவலகத்தை ஆதார் சேவா கேந்திரா அணுகியது. அப்போது, 2016 ஆம் ஆண்டு முதல் சோசன் குமார் என்ற பெயருடன், பீகார் மாநிலத்தில் ககரியா என்ற இடத்தின் முகவரியை அந்த ஆதார் கொண்டு இருந்தது தெரிய வந்தது. உரிய சரி பார்ப்புகளுக்குப் பின்னர் உரிய நடைமுறையைப் பின்பற்றி, அதிகாரிகள் அந்த இளைஞனின் அடையாளத்தை அனாதை இல்லத்தின் கண்காணிப்பாளருக்குத் தெரிவித்தனர். ககரியாவில் (பீகார்) உள்ள உள்ளூர் போலீசாரின் ஒத்துழைப்புடன், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க;-  உடலுறவுக்கு முன்பு ஆதார் அட்டையை சரிபார்க்க வேண்டுமா ? நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி !

இதையடுத்து, அந்த இளைஞனின் தாய் மற்றும் நான்கு உறவினர்கள், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் பெறப்பட்ட ஆவணங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவரின் சாட்சி ஆவணங்களுடன்  நாக்பூருக்கு வந்தனர். சச்சின் குமார் தனது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டார். ஆதார் கார்டு இதுபோன்று காணாமல் போன குடும்ப உறுப்பினர்களையும் இணைக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
click me!

Recommended Stories

அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்
மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!