உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி..!

By vinoth kumar  |  First Published Sep 2, 2022, 9:30 AM IST

நாட்டிலேயே முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகமும், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இதை உருவாக்கி உள்ளன. நாட்டிலேயே இதுவரை கட்டப்பட்ட போர்க்கப்பல்களிலேயே மிகப் பெரியது இதுதான். 

முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நாட்டிலேயே முதல் முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி போர் கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். கடற்படையின் உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகமும், கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனமும் இணைந்து இதை உருவாக்கி உள்ளன. நாட்டிலேயே இதுவரை கட்டப்பட்ட போர்க்கப்பல்களிலேயே மிகப் பெரியது இதுதான். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- muruga mutt:கர்நாடக முருக மடம் மடாதிபதி போக்ஸோ சட்டத்தில் கைது: சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் நடவடிக்கை

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல், கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் முக்கிய பங்கு வகித்தது. அதை நினைவுகூரும் வகையில், இந்த கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என பெயரிடப்பட்டுள்ளது. விக்ராந்த் இன்று கடற்படையில் இணைக்கப்படுகிறது. கொச்சியில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, இதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

இந்நிகழ்ச்சியில், இந்திய கடற்படைக்கான புதிய கொடியையும் பிரதமர் மோடி அறிமுகம் செய்கிறார். கடற்படை கொடியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வடிவமைக்கப்பட்ட சிவப்பு பட்டைகள் நீக்கப்படுகிறது. புதிய வெள்ளைக் கொடியில், தேசியக் கொடி, அசோக சின்னம் மற்றும் நங்கூரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். 1950-ம் ஆண்டு முதல் தற்போது வரை கடற்படை கொடியில் 4-வது முறையாக மாற்றம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க;- விரைவான வளர்ச்சிக்கு பாஜக ஆளும் மாநிலங்களே சாட்சியம்.. கேராளவில் பிரதமர் மோடி பேச்சு..

click me!