நீரா ராடியா, ரத்தன் டாடா பேசிய ஆடியோ டேப் கசிந்த விவகாரம் குறித்து வழக்கு 8 ஆண்டுகளுக்குப்பின் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
நீரா ராடியா, ரத்தன் டாடா பேசிய ஆடியோ டேப் கசிந்த விவகாரம் குறித்து வழக்கு 8 ஆண்டுகளுக்குப்பின் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2ஜி ஊழல் வழக்கு பெரிதாகப் பேசப்பட்டபோது, கார்ப்பரேட் லாபியான நீரா ராடியா பெயர் அடிபட்டது. இதையடுத்து, 2008ம் ஆண்டிலும், 2009ம் ஆண்டிலும் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டும் அவரின் தொலைப்பேசி அழைப்புகளை கண்காணித்து பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.
இதில் நீரா ராடியா, தொழிலதிபர் ரத்தன் டாடா பேசிய ஆடியோ டேப்பும் அடங்கும். இந்த ஆடியோ டேப் கடந்த 2010ம் ஆண்டு சில நாளேடுகளிலும் இணையதளங்களிலும் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ரத்தன் டாடா வழக்குத் தொடர்ந்தார். அதில், நீரா ராடியாவுடன் தான் பேசிய ஆடியோ டேப் கசிந்தது, என்னுடைய தனிஉரிமயை மீறியதாகும் எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு கடைசியாக கடந்த 2014ம் ஆண்டு விசாரிக்கப்பட்டது. அதன்பின் விசாரிக்கப்படவில்லை.
கடந்த 2012ம் ஆண்டு ரத்தன் டாடா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ நீரா ராடியா, ரத்தன் டாடா பேசிய ஆடியோ டேப் விவகாரம் எவ்வாறு வெளியானது என்பது அரசின் விளக்கத்தின் நகல் தேவை” எனக் கோரியிருந்தார். நீரா ராடியா தொழிலதிபர்கல், அரசியல்தலைவர்கள், உயர் அதிகாரிகளுடன் பேசிய ஆடியோ டேப் வெளியாகி நீரா ராடியா டேப் என பரபரப்படைந்தது குறிப்பிடத்தக்கது.
china news: சீனா சந்திக்கும் புதிய தலைவலி! 36 ஆண்டுகளில் இல்லாத அளவு திருமணம் குறைந்துவிட்டது
2017ம்ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய 9 நீதிபதிகள் அடங்கி அரியல் சாசன அமர்வு, தனிநபரின் அந்தரங்க உரிமை பாதுகாக்கப்பட வேண்டும், அரசியலமைப்பு அந்த உரிமையை வழங்கியுள்ளது எனத் தீர்ப்பளித்தது.
அரசியலமைப்புச் சட்டம் தனிநபர்களுக்கு அந்தரங்க உரிமையை வழங்கவில்லை என மத்திய அரசு வாதிட்ட நிலையில் இந்தத் தீர்ப்பு அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இப்போது இந்த வழக்கிலும் ரத்தன் டாடா தனது அந்தரங்க உரிமை பாதிக்கப்பட்டதாக, மீறப்பட்டதாக வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு 8 ஆண்டுகளுக்குப்பின் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது