தமிழகத்தில் சமஸ்கிருத மொழி கற்க ஊக்கமளி்க்கப்படுவதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனையுடன் தெரிவித்தார்.
தமிழகத்தில் சமஸ்கிருத மொழி கற்க ஊக்கமளி்க்கப்படுவதில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேதனையுடன் தெரிவித்தார்.
பெங்களூருவில் சமஸ்கிருத வார விழா நடந்தது. கர்நாடக சமஸ்கிருத பல்கலைக்கழகம் சார்பில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 4 கோடி பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை... பிரதமர் மோடி பெருமிதம்!!
நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து கல்லூரி செல்லும் காலம் வரை, சமஸ்கிருதம் படிப்பது எளிதானது அல்ல. ஏனென்றால், நாங்கள் வாழ்ந்தபோது இருந்த அரசியல் சூழல் அப்படி இருந்தது. நான் வெளிநாட்டில் வசிக்கவில்லை, நான் அப்போது தமிழகத்தில் வசித்தேன்.
தமிழகத்தில் சமஸ்கிருத மொழி கற்பதை யாரும் ஊக்கமளிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சமஸ்கிருதம் மொழி கற்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது.
பிஎப்ஐ அமைப்புக்கு துருக்கி, கத்தாரில் தொடர்பு, நிதியுதவி: அமலாக்கப்பிரிவு, ஏஎன்ஐ விசாரணை
ஆனால், என்னுடைய பெற்றோர் சமஸ்கிருதம் படிக்க வலியுறுத்தினார்கள். இதனால் தனியாக சமஸ்கிருதத்துக்காக ஒரு ஆசிரியரை நியமித்து, நான் சமஸ்கிருத மொழியைக் கற்றேன்.
தமிழகத்தில் உள்ள மக்கள் சமஸ்கிருத மொழி கற்பதையோ அல்லது இந்தி மொழி கற்பதையோ யாரும் ஊக்கப்படுத்தவில்லை. ஆனால், கர்நாடக அரசு சமஸ்கிருதம் கற்பதை ஊக்குவிப்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.
அசோக் கெலாட்டின் முதல்வர் பதவி பறிப்பா?சோனியா காந்தி ஆலோசனை: ராஜஸ்தான் காங்கிரஸில் பரபரப்பு
கர்நாடகத்தில் 35ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் சமஸ்கிருதத்தை கற்று வருகிறார்கள் என்பதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடந்த 7 முதல் 8 ஆண்டுகளாக, நரேந்திரமோடி பிரதமரானபின், இந்தியாவின் வளமையான, பழமையான மொழியான சமஸ்கிருதத்தை வளர்க்கவும், ஊக்கப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஆய்வுகள் நடத்தவும், கட்டுரைகள் சமர்பிக்கவும் நிதியுதவிகள் செய்யப்படுகின்றன
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்