pfi ban in india: பிஎப்ஐ அமைப்புக்கு துருக்கி, கத்தாரில் தொடர்பு, நிதியுதவி: அமலாக்கப்பிரிவு, ஏஎன்ஐ விசாரணை

By Pothy RajFirst Published Sep 30, 2022, 6:22 AM IST
Highlights

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்புக்கு துருக்கியிலும், கத்தாரிலும் தொடர்பு இருப்பது குறித்தும், அங்கிருந்து நிதியுதவி பெற்றது குறித்தும் அமலாக்கப்பிரிவு, தேசிய விசாரணை முகமை விசாரணை நடத்தி வருகின்றன.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பிஎப்ஐ) அமைப்புக்கு துருக்கியிலும், கத்தாரிலும் தொடர்பு இருப்பது குறித்தும், அங்கிருந்து நிதியுதவி பெற்றது குறித்தும் அமலாக்கப்பிரிவு, தேசிய விசாரணை முகமை விசாரணை நடத்தி வருகின்றன.

தீவிரவாத செயல்களுக்கு துணைபோதல், நிதியுதவி செய்தல், ஆட்களைச் சேர்த்தல் போன்ற குற்றச்சாட்டுகளையடுத்து, பிஎப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கப்பிரிவினர் இரு கட்டங்களாக கடந்த வாரம் சோதனை நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

காங். தலைவர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை... ஆதரவாளர்களின் எதிர்ப்பால் கெலாட் அதிரடி முடிவு!!

இந்த சம்பவத்தையடுத்து பிஎப்ஐ அமைப்பு அது சார்ந்த 8 அமைப்புகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, பிஎப்ஐ அமைப்பு மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள்கணக்குகள் முடக்கப்பட்டன. 

இந்நிலையில், பிஎப்ஐ அமைப்புக்கு துருக்கி, கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து நிதியுதவி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதால், அது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

அமலாக்கப்பிரிவு அதிகாரிஒருவர் கூறுகையில் “ பிஎப்ஐ அமைப்பினர் தங்களின் அமைப்புக்கு நிதியுதிவி கோரி கத்தார் மற்றும் துருக்கி சென்றுபல்வேறு நபர்களைச் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக பிஎப்ஐ தேசிய நிர்வாக செயற்குழுவில் உறுப்பினர்கள் இஎம் ரஹ்மான், பி.கோயா இருவரும் அறிக்கை அளித்துள்ளனர். அல்கொய்தா அமைப்புக்கு தொடர்புடைய அமைப்பிடம் இருந்து நிதி பெற்றுள்ளனர்.

கார்களில் ஆறு சீட் பெல்ட் கட்டாயம்; எப்போது அமலுக்கு வருகிறது நிதின் கட்கரி அறிவிப்பு!!

கடந்த காலங்களில் பிஎப்ஐ அமைப்பில் இருந்த ஏராளமானோர் துருக்கி, ஆப்கானிஸ்தான், சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளனர்.  அதன்பின் அந்த வழக்கு அனைத்தும் என்ஐஏவுக்கு மாற்றப்பட்டன. 

இது தொடர்பாக டெல்லி சிறப்பு போலீஸார் முகமது இஸ்மாயிலை கைது செய்தனர். இவர் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர். மற்றொருவர் 2017ம் ஆண்டு துருக்கி அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டவர்
அவரின் பெயர் வி.கே.ஷாஜகான். இவர் போலியாக பாஸ்போர்ட் தயாரித்து, இஸ்மாயில் முகைதீன் என்ற பெயரில் பாஸ்போர்ட் எடுத்ததால் துருக்கி அரசாங்கம் அவரை வெளியேற்றியது. 2006ம் ஆண்டிலிருந்த ஷாஜகான் பிஎப்ஐ அமைப்பில் இருந்தவர். 

ராகுல் காந்தியைச் சந்தித்ததும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு கதறிய சிறுமி: வைரல் வீடியோ

பிஎப்ஐ மண்டலத் தலைவர் வலப்பட்டணம் ஷமீர் ஆகியோர் ஷாஜகானுக்கு அறிமுகமாகியுள்ளார். ஷாஜகான் மூலம் ஏராளமானோர் மூளைச்சலவை செய்யப்பட்டு துருக்கி,சிரியா வழியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளர். இதில் ஷமீர் என்பவர் தற்போது சிரியாவில்உள்ளார். இவரின் மனைவி, இரு மகன்கள் ஈரானிலிருந்து தப்பித்து தற்போது மலேசியாவில் 2016ம் ஆண்டு அக்டோபர் முதல் வசித்து வருகிறார்கள்.

ஈரானில் வசிக்கும் ஷாஜி  என்பவரும் அவரின் குடும்பத்தினரும் மங்களூரு வழியாக துபாய் சென்று, ஷமீருடன் இணைந்தனர். அதன்பின் இஸ்தான்புல் சென்றனர். 

கேரளாவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று அங்கிருந்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பிஎப்ஐஅமைப்பைச் சேர்ந்தவர்கள். இதில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் பலரும் ஐஎஸ்அமைப்பில் இணைய மூளையாக இருந்தவர் ஹம்சா என்பவர்தான். இதில் ஷமீர் சரியான திட்டங்களை வகுத்து சிரியாவுக்கு செல்ல துணை செய்துள்ளார்” எனத் தெரிவித்தனர்.
 

click me!