rajasthan new cm:அசோக் கெலாட்டின் முதல்வர் பதவி பறிப்பா?சோனியா காந்தி ஆலோசனை: ராஜஸ்தான் காங்கிரஸில் பரபரப்பு

By Pothy RajFirst Published Sep 30, 2022, 7:30 AM IST
Highlights

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் ஏராளமான குழப்பங்களுக்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படும் அசோக் கெலாட்டிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியில் ஏராளமான குழப்பங்களுக்கு காரணமாக இருப்பதாகக் கூறப்படும் அசோக் கெலாட்டிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் பதவி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அடுத்த இரு நாட்களில் முக்கிய முடிவு எடுப்பார் என்றுஅந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக ராஜஸ்தான் காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், சோனியா காந்தியை நேற்று இரவு சந்தித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். உடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் இருந்தார். ராஜஸ்தான் காங்கிரஸின் நிலை, கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசல், உணர்வுகள், ஆகியவை குறித்து சச்சின் பைலட் சோனியா காந்தியிடம் எடுத்துக் கூறினார். 

அந்த ஆலோசனைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய சச்சின் பைலட் “ காங்கிரஸ் தலைவர் சாதகமான முடிவை மாநிலத்தின் நலன் கருதி எடுப்பார்” எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் நேற்று பிற்பகலில் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார். அப்போது ராஜஸ்தான் அரசியல் நிலவரம், மக்களின் எண்ணங்கள், கட்சிஉறுப்பினர்களின் உணர்வுகள் ஆகியவற்றை சோனியாவிடம், கெலாட் எடுத்துக் கூறினார்.

கார்களில் ஆறு சீட் பெல்ட் கட்டாயம்; எப்போது அமலுக்கு வருகிறது நிதின் கட்கரி அறிவிப்பு!!

அதன்பின் அசோக் கெலாட் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ நான் சோனியா காந்தியிடம் ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து தெரிவித்தேன். அவர் அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார். நான் முதல்வராக நீடிப்பது குறித்து தலைவர் சோனியா காந்தி முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்தார்

சச்சின் பைலட் நிருபர்களிடம் பேசுகையில் “ சோனியா காந்தியிடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்தேன். என் உணர்வுகளையும் தெரிவித்தேன். 2023ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்ல வேண்டும் என்பதுதான் அனைவரின் எண்ணம். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், உழைக்க வேண்டும்.

நம்முடைய குறிக்கோள் ராஜஸ்தான் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதுதான். அடுத்த 12 முதல் 13 மாதங்களில்ராஜஸ்தான் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன். கடினமாக உழைப்பதன் மூலம் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியைத் தக்கவைக்க முடியும். நம்முடைய தேர்தல் யுத்திகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், மற்ற நிர்வாகிகளிடமும் ஆலோசித்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்

காங். தலைவர் தேர்தலில் நான் போட்டியிடவில்லை... ஆதரவாளர்களின் எதிர்ப்பால் கெலாட் அதிரடி முடிவு!!

ராஜஸ்தான் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து,மாநிலத்தில் புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், சச்சின் பைலட் முதல்வராக வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அசோக் கெலாட் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்யப்போவதாக மிரட்டினர்.

அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜெய் மகான் ராஜஸ்தான் வந்திருந்தபோது அவர்களைச் சந்திக்க அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.ஆனால், இதை அசோக் கெலாட் கண்டு கொள்ளவில்லை, எல்எல்ஏக்கள் நான் சொல்வதைக் கேட்கமாட்டார்கள் என்று நழுவிவிட்டார்.

பிஎப்ஐ அமைப்புக்கு துருக்கி, கத்தாரில் தொடர்பு, நிதியுதவி: அமலாக்கப்பிரிவு, ஏஎன்ஐ விசாரணை

இந்த விவகாரம் சோனியா காந்திக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஒழுக்கமற்ற செயல்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மேலிடப் பார்வையாளர்களும் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, சோனியா காந்தியைச் சமாதானம் செய்ய அசோக் கெலாட் நேற்று டெல்லி வந்திருந்தார்

click me!