Subramanian Swamy: sitharaman: மோடி படம் இல்லாத ரேஷன் கடை: நிர்மலா சீதாராமனுக்கு சுப்பிரமணியன் சுவாமி கண்டனம்

By Pothy RajFirst Published Sep 3, 2022, 1:49 PM IST
Highlights

தெலங்கானாவில் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படாததைக் கண்டு மாவட்ட ஆட்சியரைக் கண்டித்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படாததைக் கண்டு மாவட்ட ஆட்சியரைக் கண்டித்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாவட்டம் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூர் நகரில் உள்ள ஒரு நியாயவிலைக்கடையில் நேற்று திடீரென மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தினார். 

வங்கதேசத்து பெண்ணை மணந்த தமிழ் பெண்! பாரம்பரிய முறைப்படி சென்னையில் நடந்த திருமணம்


அப்போதுஅந்த ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படவில்லை. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டிலை நேரில் அழைத்த நிர்மலா சீதாராமன் மோடியின் படம் வைக்கப்படாதது ஏன் என்று கண்டித்தார். 

ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியராக நீங்கள் உறுதி செய்ய வேண்டும். அது சேதப்படாமல், கிழிக்கப்படாமல், அகற்றப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்டித்தார்.

இந்தியப் பொருளாதாரம் 2023ல் எவ்வாறு இருக்கும்; பிரபல பொருளாதார கணிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி தகவல்கள்!!

மேலும், அங்கு கூடிய மக்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் “ மத்திய அரசு வழங்கும் அரிசியில் மத்திய அரசின் பங்கு கிலோவுக்கு ரூ.28 முதல் ரூ.30 வழங்குகிறது மாநில அரசு ரூ.2 அல்லது 3 ஆகவும், பயனாளிகள் வங்கு ஒரு ரூபாய் மட்டுமே இருக்கிறது அதனால்தான் மத்திய அரசு பெரும்பகுதி செலவை ஏற்றுக்கொண்டு கிலோ ரூ.32.35க்கு வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், ரேஷன்கடையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்படாததைக் கண்டித்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு , பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். தி இந்து ஆங்கில நாளேட்டின் செய்தியை இணைத்து நிர்மலாவை விளாசியுள்ளார்.

 

Nirmala Sitharaman fumes at absence of PM Modi’s picture at Telangana PDS shop https://t.co/jHPx6yLKVa: Most shameful display of chumchagiri. At most she could have written to the Minister in charge of PDS complaining about the non display of Modi photo.

— Subramanian Swamy (@Swamy39)

 

kailasa: swami nithyananda:ஆபத்தான நிலையில் நித்தியானந்தா ! இலங்கையில் மருத்துவதஞ்சம் கேட்டு கடிதம்

அவர் பதிவிட்ட கருத்தில் “ தெலங்கானா ரேஷன் கடையி்ல் பிரதமர் மோடி படம் வைக்கப்படாததைக் கண்டித்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கோபப்பட்டார். முகஸ்துதி செய்யும் இவரின் செயல் வெட்கக்கேடானது. ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் படம் இல்லாதது தொடர்பாக மத்திய பொதுவழங்கல் துறை அமைச்சருக்கு நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகபட்சமாக ஒரு புகார்கடிதம் எழுதியிருக்கலாம்”எனத் தெரிவித்துள்ளார்.


 

click me!