எங்கிட்டயே உன் வேலையை காமிக்கிறியா.. நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த 5 எம்எல்ஏக்களை தட்டித்தூக்கிய பாஜக..!

By vinoth kumar  |  First Published Sep 3, 2022, 12:36 PM IST

பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 7 எம்எல்ஏக்கள் இருந்த வந்த நிலையில் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மணிப்பூரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியில் மொத்தம் 7 எம்எல்ஏக்களில் 5 பேர் பாஜகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. மற்றொரு புறம் ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி களம் இறங்கின. இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி 75 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும் வென்றன. நிதிஷ் குமாரின் ஜேடியு 43 இடங்களை மட்டுமே வெற்றி பெற்று 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றாலும் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் பொறுப்பேற்றார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- kailasa: swami nithyananda:ஆபத்தான நிலையில் நித்தியானந்தா ! இலங்கையில் மருத்துவதஞ்சம் கேட்டு கடிதம்

இந்நிலையில், சுமார் இரண்டு வருட ஆட்சிக்குப் பின் யாரும் எதிர்பாராத வகையில் பாஜக கூட்டணியை விட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியேறியது. பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அரசு பலத்துடன் புதிய அரசை நிதிஷ்குமார் அமைத்தார். இந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில வாரங்களிலேயே  பாஜக தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் 7 எம்எல்ஏக்கள் இருந்த வந்த நிலையில் 5 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள 2 எம்எல்ஏக்களும் கட்சி தாவ அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க;-  2024 தேர்தலை இலக்காக வைத்து மீண்டும் இந்து முஸ்லீம் பிரச்சனையை தூண்ட பாஜக சதி.. அலறும் கி.வீரமணி. 

click me!